Breaking LIVE :இந்தோனேஷியா தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சட்ட மன்றத்தில் முன்னாள் நீதியரசர்கள் அருணா ஜெகதீசன் மற்றும் ஆறுமுக சாமி ஆணைய அறிக்கைகளை தாக்கல் செய்ய முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பரந்தூரில் அரசு நிலத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் - விசிக தலைவர் திருமாவளவன்
ரஃபேல் போர் விமானம் வாங்கியது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க தொடர்ந்த மனு தள்ளுப்படி
ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணித்த 9 ஆம் வகுப்பு மாணவன் கீழே விழுந்து பலி. தவறி விழுந்ததில் பேருந்து சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த மாணவன்
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில்களில்அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான விவகாரம்.
அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசுக்கு, இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Kerala Idukki : கேரளா, இடுக்கி மாவட்டத்தில், தொடுபுழா தாலுக்காவில் நிலச்சரிவு. குடயத்தூர் கிராமத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில், 3 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது
Corona Update : இந்தியாவில் 7,591 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..
இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ரா தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Background
சென்னையில் 100வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட்.29) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -