Breaking LIVE: கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை..!

Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அடுத்தடுத்து ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

இரவாதன் Last Updated: 28 Aug 2022 11:16 AM
கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை..!

திமுக தலைவராக முக ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவுபெற்றதை முன்னிட்டு மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

இன்று பிற்பகல் இடிக்கப்படுகிறது உபி இரட்டைக் கோபுரம்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில், இரட்டைக் கோபுரம் இன்று பிற்பகல் இடிக்கப்படுகிறது. அனைத்து ஏற்பாடுகளும் தயார்

ஆசியகோப்பை தொடர் : இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

ஆசியகோப்பை தொடர் : இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை செய்கின்றது

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 3 பேர் தப்பியோட்டம் 

இன்று JEE அட்வான்ஸ்டு தேர்வு

நாடு முழுவதும் மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் JEE அட்வான்ஸ்டு தேர்வு இன்று நடைபெற இருக்கிறது.

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை

ஓணம் பண்டிகை - சென்னை மாவட்டத்துக்கு விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்

Background

சென்னையில் 99வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட்.28) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது. 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு  நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.



இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.