Breaking LIVE : அதிமுகவில் முறையா இணைஞ்சு செயல்படப்போறேன்.. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த இயக்குநர் பாக்யராஜ் பேச்சு..

Breaking Live : தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே தெரிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 26 Aug 2022 06:38 PM
அதிமுகவில் முறையா இணைஞ்சு செயல்படப்போறேன்.. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த இயக்குநர் பாக்யராஜ் பேச்சு..

அதிமுகவில் முறையா இணைஞ்சு செயல்படப்போறேன்.. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த இயக்குநர் பாக்யராஜ் பேச்சு..

சென்னையில் சில்லென்ற மழை பெய்து வருகிறது..!

சென்னயில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றம்!

வரும் 30 ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஒரு நாள் முன்னதாக வரும்29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றம்

வரும் 30 ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஒரு நாள் முன்னதாக வரும்29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும்- அமைச்சர் எ.வ. வேலு பேச்சு

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சிறுதொழில்கள், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ,. வேலு. தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர். இதில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவது குறித்து பேசி வருகின்றனர்.


 


 

ராகுல்காந்தி குழந்தைத்தனத்தாலே நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி - குலாம்நபி ஆசாத்

ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையாலே 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. 

அத்திக்கடவு- அவினாசி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

பெருந்துறை பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் பேசிய வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’” இன்னும் சில மாதங்களில் அத்திக்கடவு- அவினாசி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.183.70 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 261.75 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பெருந்துறை வரலாற்று சிறப்புமிக்க ஊராகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம்நபி ஆசாத் விலகல்

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம்நபி ஆசாத் அறிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி விவகாரம் : பள்ளி நிர்வாகிக்கு ஜாமீன்

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் பள்ளி நிர்வாகி உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் 

புழல் சிறையில் 40 கைதிகள் விடுதலை..!

நல்லெண்ண அடிப்படையில் புழல் சிறையில் இருந்து 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 சரிவு..!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ரூபாய் 38 ஆயிரத்து 720க்கு விற்கப்படுகிறது. 

செப்டம்பர் 7-ந் தேதி நீட் தேர்வு முடிவுகள்

செப்டம்பர் 7-ந் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமைகள் அறிவித்துள்ளது. 

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகைகள் கொள்ளை..!

சென்னை வெங்கடேஸ்வரா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

Background

சென்னையில் 97வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட்.26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது. 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு  நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.





இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.