Breaking LIVE: திமுக அறிவாளி கட்சிதான்; உச்சநீதிமன்ற நீதிபதி கருத்துக்கு எம்.பி செந்தில்குமார் பதில் ட்வீட்
இன்றைய தினத்தின் செய்திகள் உடனுக்குடன்...
MP Senthil Kumar: திமுக அறிவாளி கட்சிதான்; உச்சநீதிமன்ற நீதிபதி கருத்துக்கு எம்.பி செந்தில்குமார் பதில் ட்வீட்
Freebies Culture: பாஜக அரசுக்கு ஒரு விதி..எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதியா? ட்விட்டரில் கேள்வி எழுப்பிய அமைச்சர் பிடிஆர்
CJI on DMK: நீங்கள் மட்டும் அறிவாளி கட்சி என நினைக்காதீர்கள்.. திமுகவை சாடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.. ஏன்?
சிறுமி தான்யாவிற்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை நிறைவானது. காலையில் துவங்கிய அறுவை சிகிச்சை 9 மணி நேரம் கழித்து வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சிகிச்சை முடிந்ததை அடுத்து அமைச்சர் நாசர் வருகை தந்துள்ளார்
ஈபிஎஸ் மேல் முறையீட்டு மனு தொடர்பாக ஓபிஎஸ் பதில் அளிக்க உத்தரவு - சென்னை உயர்நீதிமன்ற இருநபர் அமர்வு உத்தரவு
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு மனுவானது மீண்டும் வருகிற வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு மனுவின் மீதான விசாரணை துவங்கியது.
தொகுதிகளில் நிறைவேற்றப்படாமல் உள்ள நீண்ட நாள் கோரிக்கைகள் என்ன?
10 கோரிக்கைகளை பட்டியலிட்டு அனுப்பி வைக்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையத்தின் அறிக்கை இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்
பின்லாந்து பிரதமர் சன்னா மரின் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என பரிசோதனையில் கண்டுபிடிப்பு
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஆம்னி காரில் பயணித்த சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ஆத்தூரை சேர்ந்த ராஜேஷ், சந்தியா, சரண்யா, ரம்யா, சுகன்யா மற்றும் அவரது மகள் 11 வயதான தன்ஷிகா பலியாகினர். மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
Background
சென்னையில் 94வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட்.23) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -