Breaking LIVE: பாஜகவில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ கு.க செல்வத்துக்கு திமுகவில் மீண்டும் பதவி!

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 27 Nov 2022 07:41 PM
PM Modi : குஜராத்தில் சாலை வழியாக பயணித்து ஆதரவு திரட்டிய பிரதமர் மோடி

RRR Box Office (Japan): பாகுபலியின் வசூலை மிஞ்சிய ஆர்.ஆர்.ஆர்!

ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அண்மையில் ஜப்பானில் வெளியானது. அங்கு நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்தப்படம் 17 கோடி வசூலித்து முன்னதாக ஜப்பானில் வெளியிடப்பட்ட பாகுபலி படத்தின் வசூலை முறியடித்துள்ளது. 

இந்தியா- ஆஸ்திரேலியா ராணுவம் கூட்டு பயிற்சி..!

ஐநா உத்தரவில் இந்தியா- ஆஸ்திரேலியா ராணுவம் இன்று முதல் 15 நாட்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர். 

ஜி20 தலைமை பதவி நமக்கு பெரிய வாய்ப்பு : மோடி

ஜி20 தலைமை பதவி நமக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி பேச்சு

கோரிப்பாளையத்தில் பறக்கும் பாலம் அமைக்க டெண்டர்..!

மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.175.80 கோடியில் பறக்கும் பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் பங்கேற்கிறார்

இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்கிறார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு பி.டி.உஷா போட்டி

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு பி.டி.உஷா போட்டியிடுகிறார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு பி.டி.உஷா போட்டி

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு பி.டி.உஷா போட்டியிடுகிறார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு பி.டி.உஷா போட்டி

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு பி.டி.உஷா போட்டியிடுகிறார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு பி.டி.உஷா போட்டி

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு பி.டி.உஷா போட்டியிடுகிறார்.

கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு - சென்னை வானிலை ஆய்வு மையம்

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கொரோனா பரிசோதனையில் தளர்வு

விமான நிலையம், மருத்துவமனை என பல்வேறு பொது இடங்களில் கொரோனா பரிசோதனையில் அதிரடி தளர்வுகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின்..!

தனது பிறந்த நாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.  

தமிழ்நாடு முழுவதும் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது

தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Background

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 180 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
 
பெட்ரோல், டீசல் விலை:


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 190வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (நவம்பர்.27) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


2025 இலக்கு:


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.