Breaking News LIVE: ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்,.
தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும். தமிழ்நாடு டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வலியுறுத்தல். பிடிவாரண்ட்களை நிறைவேற்றுவதில் போலீஸ் மெத்தனமாக உள்ளதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்ததை குறிப்பிட்டு கடிதம்
குடும்ப தலைவிக்கு ரூ.1000 குறித்த முதலமைச்சரின் அறிவிப்பு பற்றி தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார். தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரை சந்தித்து அதிமுகவின் இன்பதுரை புகாரளித்தார். முதலமைச்சரின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என அதிமுக குற்றச்சாட்டு
ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மை தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜெர்மனி பிரதமர் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவர் இந்திய பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வயது மூப்பின் காரணமாக இன்று ( பிப்.24 )காலமானார். அவருக்கு வயது 95 ஆகும்
கோவையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை காட்டுக்குள் விடுவிக்கப்பட்டது. மானாம்பள்ளி வனப்பகுதியில் மந்திரி மட்டம் என்ற இடத்தில் மக்னா யானையை வனத்துறையினர் விடுவித்தனர்.
தமிழ்நாட்டில் நாளை டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வு நடபெறுகிறது. 55,000 பேர் தேர்வு எழுதுகின்றனர். 5,446 பணியிடங்களுக்கு நாளை 20 மாவட்டங்களில் காலை, மதியம் என 2 பிரிவாக தேர்வு நடைபெறுகிறது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர்திருவிழாவில் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி வண்ணாங்கோயிலில் உள்ள தனியார் தார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய புகையால் 10 பேர் மயக்கமடைந்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலை நிறுத்தக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று நீதிமன்றம் நடவடிக்கை.
சிறைச்சாலைகளில் சலவை இயந்திரங்கள் வழங்கியது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காந்தி பேரனும் மேற்குவங்கத்தின் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தாத்தாவோ, ஓ.பன்னீர்செல்வம் தாத்தாவோ அ.தி.மு.க.வை தொடங்கவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக பேசினார்.
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
அதானி குழும நிறுவனங்கள் குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநில புதிய ஆளுநராக அப்துல் நசீர் பதவியேற்றுக்கொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
Background
Gold, Silver Price Today: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. தொடர்ந்து விலை குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ 41,880 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,235 ஆக விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 44,776 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,597 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்க ஆபரணங்கள்:
இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால்தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.
சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.
அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது.
தங்கம் ஒரு சிறு சேமிப்புத் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தால், ஒரு நாளில் அது பெரிய தொகையாக நமக்கு கிடைக்கும். பணமாக சேர்த்து வைத்தால், நாம் செலவு செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம், நகைச் சீட்டு என்றால் அவ்வாறு ஆகாது. இல்லையா? தங்கம் மிகப்பெரிய முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்க சேமிக்க தொடங்கியாச்சா? உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.
தங்க சேமிப்பு திட்டங்கள் :
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் தங்கத்தை வாங்கும் நபர்களால் தங்க சேமிப்பு திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நகைக்கடைக்காரர்கள் பொதுவாக இதுபோன்ற திட்டத்தில் கடைசி தவணை செலுத்துவார்கள்.
டிஜிட்டல் தங்கம்:
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வடிவங்களில் வாங்கலாம்.
தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFகள்) : ப.ப.வ.நிதி என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை உள்ளடக்கியது. அதன் மதிப்பு தூய தங்கத்தால் கணிக்கப்படுகிறது. அதன் மதிப்பு தற்போதைய தங்கத்தின் விலை மற்றும் தங்கத்தின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. தங்கக் குவிப்புத் திட்டம் : Paytm மற்றும் Phonepe போன்ற மொபைல் வாலட்டுகள், வாடிக்கையாளர்களை மாதாந்திர முதலீட்டில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கத்தை சேமிக்கவும் அனுமதிக்கின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -