Breaking News LIVE : சென்னை : கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறிய மின்சார ரயில்.. ரயில் ஓட்டுநருக்கு காயம்.. சென்னையில் பரபரப்பு..

Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 24 Apr 2022 05:00 PM
கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறிய மின்சார ரயில்.. ரயில் ஓட்டுநருக்கு காயம்.. சென்னையில் பரபரப்பு..

கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறிய மின்சார ரயில்.. ரயில் ஓட்டுநருக்கு காயம்.. சென்னையில் பரபரப்பு..

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் - பள்ளிக் கல்வி ஆணையர்

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வி ஆணையர் கூறினார். தாய்மொழி தமிழ், இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழி கொள்கை மட்டுமே வழக்கத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

காஷ்மீரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு - காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

நெல்லையில் தாக்கப்பட்ட காவல் ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் காசோலையை வழங்கினார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.!

நெல்லையில் தாக்கப்பட்ட காவல் ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் காசோலையை வழங்கினார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.!





பாரதியார் அருங்காட்சியகத்தில் தனது வருகையை பதிவு செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

பாரதியார் அருங்காட்சியகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வருகையை பதிவு செய்தார். 




 

மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது : முதலமைச்சர் முக ஸ்டாலின்

மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது. ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், ஊராட்சிகளில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தன்னிறைவு அடைய  வேண்டும். ஜாதி மத பேதங்களை அனைவரும் ஒற்றுமையுடன் ஒருமித்த மனத்துடன் வாழ வேண்டும் தந்தை பெரியார் பெயரில் பெரியார் சமத்துவபுரம் திட்டம் கொண்டு வரப்பட்டது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின்  உரையாற்றியுள்ளார். 

எங்கள் ஆட்சி எப்படி உள்ளது..? பொதுமக்களிடம் கேள்வி கேட்ட முதலமைச்சர் முக ஸ்டாலின்!

ஆட்சி தொடங்கி ஒரு ஆண்டு ஆகப்போகிறது. ஆட்சி எப்படி உள்ளது என பொதுமக்களிடம் கேள்வி கேட்டு வருகிறார் - முதலமைச்சர் முக ஸ்டாலின் 

தெலுங்கு டூ தமிழ் பாராட்டிய தமிழக முதல்வர்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில்  செங்காடு கிராமம் சபை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டார், அப்போது கிராம ஊராட்சி மன்ற தலைவர் செஞ்சுராணி கவசகர் வரவேற்புரை ஆற்றினார். 



தெலுங்கை தாய்மொழியாக கொண்ட தலைவர் செஞ்சுராணி கவசகர், தனது குறிப்பேட்டில் தெலுங்கில் தமிழ் மொழியில் எழுதிய , அதை தமிழில் படித்தார். இதை பார்த்தால் முதலமைச்சர், தமிழ் மொழியில் வரவேற்பு அளித்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கைதட்டினார்

ஈரோடு கொடுமுடியில் 11 செ.மீ மழை!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

பெரும்பாலோனோர் மாஸ்க் அணிவதில்லை : சுகாதாரத்துறை செயலர்

பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்துத்துறையை பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும்பாலோனோர் மாஸ்க் அணிவதில்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பு : முதலமைச்சர் நாளை ஆலோசனை

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். 

இந்தியாவில் ஒரேநாளில் 2,593 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரேநாளில் 2,593 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

தேனியை அடுத்த பெரியகுளம் பகுதியில் உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நைஜீரியா எண்ணெய் ஆலையில் தீ விபத்து - 100 பேர் பலி

நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பலி 

கிராம சபை கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார் முதலமைச்சர்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காட்டில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்கிறார்.

சென்னை வந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

சென்னை வந்த உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையம் செல்கிறார். அங்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சியினர் வரவேற்கின்றனர். 

பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் பயணம் : பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.

Background

சென்னையில் 18வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.