Breaking News LIVE : ஏப்ரல் 27-ஆம் தேதி, பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை..

Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 23 Apr 2022 10:00 PM
பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் 27-ந் தேதி ஆலோசனை..!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி வரும் 27-ந் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

ஏப்ரல் 27-ஆம் தேதி, பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை..

ஏப்ரல் 27-ஆம் தேதி, பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை..

ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வெற்றி காண முடியும் - முதல்வர் ஸ்டாலின் உரை..!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 6 சிறந்த மாணவர்களுக்கு திறன் பயிற்சி கடிதம், பணியாணையை முதல்வர் வழங்கினார். 


எந்த துறையிலும் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வெற்றி காண முடியும் - முதல்வர் ஸ்டாலின் 


இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் தகுதியை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின். 


தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியை மாணவர்களுக்கு பல்கலைகழகங்கள் வழங்க வேண்டும் - முதல்வர் 


நெ.1 என்ற நிலையை தமிழகம் அடையத் தேவையான திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது - முதல்வர் 

ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வெற்றி காண முடியும் - முதல்வர் ஸ்டாலின் உரை..!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 6 சிறந்த மாணவர்களுக்கு திறன் பயிற்சி கடிதம், பணியாணையை முதல்வர் வழங்கினார். 


எந்த துறையிலும் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வெற்றி காண முடியும் - முதல்வர் ஸ்டாலின் 


இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் தகுதியை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின். 


தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியை மாணவர்களுக்கு பல்கலைகழகங்கள் வழங்க வேண்டும் - முதல்வர் 


நெ.1 என்ற நிலையை தமிழகம் அடையத் தேவையான திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது - முதல்வர் 

டெக்னோ நிறைவு விழா.. விருதுகளை வழங்கிய முதல்வர்..!

அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் டெக்னோ 2022 நிறைவு விழாவில்  “ நான் முதல்வன்” திட்டத்தின் இளம் அறிவாளிகளை தேர்வு செய்ததற்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

தமிழர்கள் மொழி, அடையாளம் மிக்கவர்கள், மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் உயர் கல்வி பயின்றால் வேலை கிடையாது: இந்திய அரசு அதிரடி

பாகிஸ்தானுக்குச் சென்று உயர் கல்வி பயின்றால் இந்தியாவில் வேலை கிடையாது என்று உயர் கல்வி அமைப்புகளான யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ அதிரடியாக அறிவித்துள்ளன.

அரசு விழாக்களில் பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்த தடை : பஞ்சாப் அரசு அதிரடி

பஞ்சாப்பில் சுகாதாரத்துறை தொடர்பாக அரசு விழாக்களில் பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

"நானும் நீதிபதி ஆனேன்" ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு எழுதிய புத்தகம் வெளியீடு!

ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு அவர்கள் எழுதிய "நானும் நீதிபதி ஆனேன்" புத்தகம் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் வெளியிடப்பட்டது.

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும்: உயர்நீதிமன்ற விழாவில் முதலமைச்சர்

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உயர்நீதிமன்றத்தில் நான் பங்கேற்கும் முதல் விழா இது என்று உயர்நீதிமன்ற விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மக்களின் குரலாக உள்ளார் என்றும், மக்களின் மனசாட்சி என்ற முறையிலேயே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்புகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 


மேலும், நீதி நெறிமுறைப்படி சட்டங்களை பின்பற்றி தமிழ்நாட்டில் ஆட்சி வழங்கி வருகிறோம் . வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி 7 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

தமிழகம், புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் மீண்டும் விண்ணப்பம்

நாகை காரைக்கால் பகுதிகளில் 137 ஆய்வுக் கிணறுகளும், விழுப்புரம் கடலூர் பகுதிகளில் 102 ஆய்வு கிணறுகளும் அமைக்க  அனுமதி கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு வேதாந்தா நிறுவனம் மீண்டும்  விண்ணப்பம் செய்துள்ளது. 

சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை ஐஐடியில் மொத்தம் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 25 பேருக்கு கொரோனா பாசிட்டின் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று குறைந்தது தங்கம் விலை

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4959க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 39672க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், ஆபரணத்தங்கம் இன்று ரூபாய் 14 குறைந்து ரூபாய் 4945க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 112 குறைந்து ரூபாய் 39560க்கு விற்கப்படுகிறது.

நெல்லை பெண் ஆய்வாளருக்கு கத்திகுத்து

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் அருகே கோவில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளருக்கு கத்திகுத்து.


படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரேட் திரேஷா நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

10 கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம்!

வடபழனி முருகன் கோயில் உள்பட 10 கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கியது. 

கன்னியாகுமரியில் தொடர் கனமழை!

கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை உள்பட பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

உலகளவில் 50. 84 கோடி பேருக்கு கொரோனா

உலகளவில் 50. 84 கோடி பேருக்கு கொரோனா; 62. 38 லட்சம் பேர் உயிரிழப்பு - 46. 08 கோடி பேர் குனமடைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடர் : இன்று 2 போட்டிகள்

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் கொல்கத்தா - குஜராத், பெங்களூர் - ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றன. 

இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை தமிழகம் வருகிறார். தொடர்ந்து, (நாளை) 24 ஆம் தேதி புதுச்சேரி நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்துகொள்கிறார் .

1 முதல் 8 வகுப்பு வரை இன்று விடுமுறை

1 முதல் 8 வகுப்பு வரை இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை என்றும், ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Background

சென்னையில் 17வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.