Breaking News LIVE: ஆந்திராவில் சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு - திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை மார்ச்-8 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. பெண்களுக்கான சம உரிமை, பொருளாதார மேம்பாடு உள்ளிடற்றவற்றை ஊக்கப்படுத்த இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் தன் வேலையை எப்போது செய்யப்போகிறார்?
ஆளுநர் மாளிகையை காபி ஷாப் போல மாற்றுவது ஆளுநரின் செயல்பாடாக இருக்க முடியாது’ இருக்க கூடாது என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆளுநர் அக்கப்போர் செய்வதை விடுத்து, எப்போது தன் வேலையை செய்யப் போகிறார்? என்று பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திராவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது சாலை விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரகு சாகு, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், சின்னத்தையும் ஒதுக்கியதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 வயதில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நடிகை காயத்ரி ரகுராம் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் உடன் சந்தித்து சக்தி யாத்திரைக்கு ஆதரவு கோரியதாக குறிப்பிட்டார். அதோடு,வி.சி.க. கட்சியில் இணையும் முடிவும் இருக்கா என்ற கேள்விக்கு பதிலளித்த காயத்ரி ரகுராம் “ அரசியல் ரீதியிலாக எந்த முடிவும் இப்போது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
நான் ஒரு கட்சியில் இருந்தபோது, ஒடுக்குமுறையை எதிர்கொண்டபோது எனக்காக முதலில் குரல் கொடுத்தவர் தொல். திருமாவளவன் . மரியாதை நிமிர்த்தமாக அவரைச் சந்தித்தேன். சீமான் அண்ணனும் எனக்கு ஆதரவு தெரிவித்தார். ஆதரவு தெரிவித்தவர்களைச் சந்திப்பதுதான் முறை. காயத்ரி ரகுராம் திருமாவளவன் உடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி - 3 முறை ஒத்திவைக்கப்பட்ட மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிரமத்தில் நடத்திய சோதனையில் 20 மூட்டை ரேசன் அரிசியை குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
6 வயதுக்கு பிறகே முதல் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சீமான் பேச்சு தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு திருநகர் காலணியில் 13ஆம் தேதி பரப்புரை செய்த சீமான் அருந்ததியினர் பற்றி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான திட்டச் செலவு உயர்வு - ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன்
ஓசூர் அருகே திப்பசந்திரம் கிராமத்தில் எருது விடும் திருவிழாவில் மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு - திருவிழாவை காணச் சென்ற ஆரூப்பள்ளி பகுதியை சேர்ந்த மஞ்சு என்பவர் உயிரிழப்பு
சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்குப்பதிவு - கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று மாலை பாஜகவினர் பேரணி சென்றனர்
அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தில் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. 300 பயணிகளுடன் டெல்லி வந்து கொண்டிருந்த விமானம் சுவீடனின் ஸ்டாக்ஹோமில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னை திரிசூல மலை பகுதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் மீது மர்ம நபர்கள் கல் வீச்சி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நித்யானந்தா சீடர் பிரபானந்தா அளித்த புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார் விசாரணை
சென்னை அயனாவரம் பகுதியில் ரவுடி பெண்டு சூர்யாவை பெண் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். பிடித்த சென்றபோது தப்பியோடியதால் பெண்டு சூர்யாவை முழங்காலில் எஸ்.ஐ மீனா சுட்டுபிடித்ததாக கூறப்படுகிறது. தற்போது, துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ரவுடி பெண்டு சூர்யாவுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
தாமதமாக பணிக்கு வரும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Background
சென்னையில் தொடர்ந்து 9வது மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
9 மாதங்களை கடந்தும் மாறாத விலை
கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
அதன்பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலை 277வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி 22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என பெட்ரோலியம் மற்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -