Breaking News Live: தமிழ்நாட்டில் இன்று 57 பேருக்கு கொரோனா..! சென்னையில் 37 பேருக்கு கொரோனா...!
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
சென்னையில் நேற்று 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 57 பேருக்கு புதியதாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணையில் உயிரிழந்த விக்னேஷின் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மாலை தமிழகம் வருகிறார். 24 ஆம் தேதி புதுச்சேரி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் அமித்ஷா
முக்கியத்துவம் வாய்ந்த எங்கள் இடத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்துள்ளார்கள்: சசிகலா
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இரண்டாம் நாள் விசாரணைக்கு பிறகு சசிகலா அறிக்கை.
திருநாவலூர் அருகே பெரிய ஒடப்பன் குப்பம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு
அரியலூர் உடையார்பாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 86 வயது முதியவருக்கு ஆயுள் முழுக்க சிறை.
டெல்லியில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்: மாநில அரசு
மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - மாநகராட்சி
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
விழுப்புரம் அருகே நன்னாட்டபாளையம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு தந்த ஆசிரியரிடம் போலீசார் விசாரணை
1 முதல் 8 ம் வகுப்பு வரை நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை என்றும், ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு
டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ், திடீரென துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு
தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்..
தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமரை விமர்சிக்கவே கூடாதா? ஜிக்னேஷ் மேவானி கைதுக்கு கண்டனம் தெரிவித்து தொல்.திருமாவளவன் எம்.பி கேள்வி
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் இரண்டாவது நாள் விசாரணை ஆரம்பமாகி உள்ளது. சென்னை திநகர் வீட்டில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வருகிற மே 8 ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4946க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 39568க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், ஆபரணத்தங்கம் இன்று ரூபாய் 19 அதிகரித்து ரூபாய் 4965க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 152 அதிகரித்து ரூபாய் 39720க்கு விற்கப்படுகிறது.
24 காரட் தங்கம் கிராமுக்கு ரூபாய் 5364க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 42912க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 72.10க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 72,100க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் ஒரேநாளில் 2, 451 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்றால் 54 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 தேதி வரை சென்னை அருகே நடைபெற இருக்கிறது. இதையடுத்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு அமைப்பு
பஞ்சாப் மாநிலத்தில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 2 வது நாளாக இரவில் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலியானது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் 16வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Background
சென்னையில் 16வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -