Breaking News Live: கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் நாளை விசாரணை
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டுமென அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது
ஆளுநருக்கு எதிராக வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேச துரோக குற்றத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் நாளை சசிகலாவிடம் சென்னையில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தகவல்
ஆளுநருக்கு பாதுகாப்பு கொடுக்காமல், கருப்பு கொடி காட்டி போராட்டம் செய்தவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது. - ஈபிஎஸ்
தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாதபோது சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது - ஈபிஎஸ்
ஆளுநர் மீது தாக்குதல் நடக்கும் முயற்சியை ஏன் முன்கூட்டியே உளவுத்துறை கணித்து கூறவில்லை - ஈபிஎஸ்
கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்
சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 5025க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 40200க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், ஆபரணத்தங்கம் இன்று ரூபாய் 68 குறைந்து ரூபாய் 4957க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 544 குறைந்து ரூபாய் 39656க்கு விற்கப்படுகிறது.
சென்னை மணலி புதுநகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
இந்தியாவில் ஒரே நாளில் இரண்டாயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. ஒரே நாளில், 2,067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிப்பதால் உரிய நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.
டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுபாடுகளை அமலுக்கு கொண்டு வருவது குறித்து இன்று ஆலோசனை நடைபெற இருக்கிறது.
இலங்கையிலிருந்து அகதிகளாக குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தமிழர்கள் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி 2 நாள் பயணமாக இன்று காலை 10 மணிக்கு டெல்லி செல்கிறார். நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப கோரிக்கை எழுந்தநிலையில் இன்று டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி தலைமை செயலாளராக இருந்த அஸ்வினி குமார் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் 14வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
Background
பிளஸ் 1, பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -