Breaking News LIVE: எஸ்.ஐ. வீட்டிலேயே 30 சவரன் நகை கொள்ளை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
விருதுநகரில் எஸ்.ஐ. வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர்களின் தரவுகள் விற்பனை தொடர்பாக காவல்துறை அறிக்கை அளிக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தனியார் நிறுவன சார்பில் 20 ஆயிரத்திற்கு வாக்காளர்களின் தரவுகள் விற்பனையானதாக தகவல் வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக வட மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 3 பேரை பிடிக்க திருவண்ணாமலை எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் ஹரியானாவில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிற்பி திட்டத்தில் அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். 5,000 மாணவர்கள் ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயற்சியகத்திற்கு ரயிலில் அழைத்து செல்லப்பட்டனர்.
பிப்ரவரி 21, 22ஆம் ஆகிய தேதிகளில் திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நடிகர் மயில்சாமியின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கர்நாடகா வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் மீனவர் ராஜாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கை வரும் வரை உடலை வாங்க மறுத்த நிலையில், எஸ்.பி. நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்புதல் ஏற்பட்டு உடலை வாங்கினர்.
மோசமான வானிலையால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு செல்ல இருந்த திரௌபதி முர்முவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சின்ன வரிகம் பகுதியில் தனியார் காலணி தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இரண்டாவது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று மாதத்திற்கு முன் இந்த தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் 40 சவரன் கொள்ளையடித்த சம்பவத்தில் பெங்களூரு விரைந்தது தனிப்படை. பத்மாவதி என்பவர் ப்ளம்பிங் வேலை செய்வதாக கூறி நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் மாமல்லப்புரத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயார் செய்யப்பட்ட ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
பிரபல நடிகர் மயில்சாமி மறைவுக்கு பிரபல இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்: தவசிமடையில் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 500 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
தமிழில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான மயில்சாமி, திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். மாரடைப்பு காரணமாக சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மயில்சாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Background
தமிழ்நாட்டில் தொடர்ந்து 274ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
பெட்ரோல், டீசல்:
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5உம், டீசல் விலை ரூ. 10உம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இன்றைய விலை
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 274ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி.19) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூற்று ஐம்பது நாள்களை கடந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -