Breaking News LIVE : தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம் - ஆளுநர் தமிழிசை

Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 16 Apr 2022 07:47 PM
தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம் - ஆளுநர் தமிழிசை

தேநீர் விருந்து நிகழ்வை அரசியலாக்க வேண்டாம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறினார். எல்லாவற்றிலும் அரசியலை புகுத்தினால் யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது என்றும், காரணமின்றி புறக்கணிக்க வேண்டாம் எனவும் கூறினார்.

இளையராஜா என்ன குற்றம் செய்தார்? அறிவாலய சுற்றத்துக்கு பிடிக்காத கருத்து, குற்றமா? - எல்.முருகன்

இளையராஜா என்ன குற்றம் செய்தார்? அறிவாலய சுற்றத்துக்கு பிடிக்காத கருத்து, குற்றமா? - எல்.முருகன்

இளையராஜா என்ன குற்றம் செய்தார்? அறிவாலய சுற்றத்துக்கு பிடிக்காத கருத்து, குற்றமா? - எல்.முருகன்

தேர்தல் வியூகம் - சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோர் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார். 2024 மக்களவை தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பிரஷாந்த் கிஷோ விளக்கமளித்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்தது.

2024 தேர்தல் வியூகம் குறித்து 4 மணிநேரமாக, சோனியா காந்தியிடம் பிரஷாந்த் கிஷோர் விளக்கம் - காங்கிரஸ்

2024 தேர்தல் வியூகம் குறித்து 4 மணிநேரமாக, சோனியா காந்தியிடம் பிரஷாந்த் கிஷோர் விளக்கம் - காங்கிரஸ்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவில் நுழையத்தடை

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்த  நாடு தடை விதித்துள்ளது. உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை பிரிட்டன் வழங்கி வரும் நிலையில் பிரதமர் போரிச் ஜான்சனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. பொறுப்பேற்ற 10 மாதங்களில் 1 லட்சம் மின் இணைப்புகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. பொறுப்பேற்ற 10 மாதங்களில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் கடந்த தி.மு..க ஆட்சியில் இலவச மின் இணைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு எப்போதும் மின் இணைப்பு கொடுக்கும் அரசுதான் இந்த அரசு. விவசாயிகள் பெறும் பயனே அரசுக்கு பெறும் பாராட்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.  

சித்திரை திருவிழா - வைகையாற்றில் கூட்ட நெரிசல் - 2 பேர் உயிரிழப்பு

சித்திரை திருவிழா - வைகையாற்றில் கூட்ட நெரிசல் - 2 பேர் உயிரிழப்பு; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 4 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றுக்கு 11,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து 796 பேர் குணமடைந்துள்ளனர்.

1 லட்சம் மின் இணைப்பு விவசாயிகளுடன் இன்று உரையாடும் முதலவர்

1 லட்சம் மின் இணைப்பு தொடர்பாக விவசாயிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாடுகிறார். சென்னையில் மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.

வேலூர் அருகே 10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

வேலூர் அருகே 10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவிலிருந்து கொண்டு வரப்பட்ட குட்கா காவல்துறையினர் பரிசோதனையில் சிக்கியுள்ளதாக தகவல். 

தமிழக ஆளுநர் அவசியமற்ற அரசியல் செய்கிறார் - முரசொலி

தமிழக ஆளுநர் வி.என்.ரவி அவசியமற்ற அரசியல் செய்கிறார் என்று தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலியில் செய்தி வெளியாகியுள்ளது. 

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்...!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. இதை நேரில் காண பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

Background

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா  கடந்த 5ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் 14ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.