Breaking News Live: ஆளுநர் தேநீர் விருந்து : அதிமுக, பாஜக, பாமக சார்பில் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்

Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 14 Apr 2022 05:26 PM
ஆளுநர் தேநீர் விருந்து : அதிமுக, பாஜக, பாமக பங்கேற்பு

ஆளுநர் தேநீர் விருந்து : அதிமுக, பாஜக, பாமக சார்பில் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்

தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைப்பிடிப்பதையொட்டி சமத்துவ உறுதி மொழி ஏற்றாா் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைப்பிடிப்பதையொட்டி சமத்துவ உறுதி மொழி ஏற்றாா் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு

நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்ரமணியன் சந்தித்தனர். அதில் ஆளுநர் உறுதி எதுவும் அளிக்காத்தால் இன்றைய தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்காது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கோப்புகளில் கையெழுத்திட அழுத்தம் கொடுக்க அமைச்சர்கள் சென்றுள்ளனர்- அமைச்சர் பொன்முடி

தமிழக அரசு அனுப்பி வைத்த கோப்புகளில் கையெழுத்து போடாமல் இருக்கும் ஆளுநரை கையெழுத்து போட அழுத்தம் கொடுப்பதற்காகவே இரண்டு அமைச்சர்களும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர் - இருவரையும் முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்  என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஆளுநருடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு !

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியன் ஆகியோர் திடீரென சந்தித்துள்ளனர். 

40 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு மையத்தை திறந்த முதலமைச்சர் !

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 

சித்திரை திருவிழா: மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்க்க குவிந்த மக்கள் !

சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று மீனாட்சியம்மன் - சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. இதை காண மக்கள் பலரும் கோயிலில் குவிந்துள்ளனர். 


இன்று காலை 10.35 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் !

சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு

மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர்  திருக்கல்யாணத்தில் அமைச்சர் பி.மூர்த்தி, முன்னாள் அமைச்சர் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டுள்ளனர்.

அம்பேத்கர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

சட்டமேதை அன்னல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

உலகளவில் 50.18 கோடி பெருக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில்தற்போது வரை 50.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளாகியுள்ளது. 62.13 லட்சம் பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 45.19 கோடி பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கும்ப ராசியிலிருந்து மீனத்திற்கு இடம் பெயர்ந்த குரு பகவான்

கும்ப ராசியிலிருந்து இன்று அதிகாலை மீன ராசிக்கு குரு பகவான் இடம்பெயர்ந்துள்ளார். இன்று குருபெயர்ச்சி நிகழ்வு நடைபெற்றுள்ளது. 

தமிழ்நாட்டில் சமத்துவநாள் கொண்டாட்டம்:

சட்டமேதை அன்னல் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று சமத்துவநாளாக கொண்டாடப்படுகிறது. 

சித்திரை திருநாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று சித்திரை திருநாள் கொண்டாடப்படுகிறது. 

Background

தமிழ்நாடு முழுவதும் இன்று சித்திரை திருநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று தமிழ்நாட்டில் சமத்துவ நாள் கொண்டாடப்படுகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.