Breaking News LIVE: விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி

Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 08 Mar 2023 05:24 PM
Breaking News LIVE : "பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உரிமை"  உயர்நீதிமன்றம்

பழங்குடியின பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சமபங்கு பெறும் உரிமை  வழங்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு அறிவிப்பை வெளியிட தேவையான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் லாரி- பைக் மோதி இருவர் பலி..!

பெரம்பலூரில் லாரி - பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே பைக்கில் வந்த இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

பாஜக கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை..!

சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் 163 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 


 

சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை பொய் புகார் - நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

இயக்குனர் சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் புகார் அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறை அறிவித்துள்ளது. 

சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை பொய் புகார் - நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

இயக்குனர் சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் புகார் அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறை அறிவித்துள்ளது. 

Breaking News LIVE : விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2016ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு போடப்பட்டது.

கள்ளக்குறிச்சி வழக்கில் 2 வாரங்களில் இறுதி அறிக்கை - காவல் துறை..!

கள்ளக்குறிச்சி மாணவி இறந்த வழக்கில் இரண்டு வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல் துறை கூறியுள்ளது. 

Gold and Silver Price: தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. சவரனுக்கு ரூ.560 குறைவு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ 41,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,165 ஆக விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 44,216 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு  ரூ.5,527 ஆக விற்பனையாகிறது. 

Breaking News LIVE: உலக மகளிர் தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக உலக மகளிர் தினம் அமையட்டும்! பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு, ஆகியவற்றைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதிசெய்வதே நமது திராவிட மாடல்! பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகளிர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

4வது டெஸ்ட் - நேரில் போட்டியை பார்க்கிறார் பிரதமர் மோடி

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. 4வது டெஸ்ட்டின் முதல் நாள் போட்டியை பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பார்க்கின்றனர். 

ஹோலி பண்டிகை - ஆளுநர் ரவி வாழ்த்து

எல்லோர் வாழ்விலும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம், வளத்தை கொண்டு வரட்டும் ஹோலி - ஆளுநர் ரவி

Breaking News LIVE: சென்னையில் பைக் ரேஸ் - 4 இளைஞர்கள் கைது 

சென்னை அண்ணாசாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் ராகுல், கிருஷ்ணா, அஜய், லோகேஷ் கைது - கைதானவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் 

கடைசி டெஸ்ட் போட்டி: வெஸ்ட்இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

வெஸ்ட்இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் : பெண்கள் தினத்தையொட்டி இன்று இலவச டிக்கெட்

மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் பெண்கள் தினத்தையொட்டி இன்று டிக்கெட் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்..!

கோடை காலத்தை வரவேற்கும் விதமாக வடமாநில மக்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது

Background

சென்னையில் தொடர்ந்து 291வது நாளாக மாற்றமில்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம். 


இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால்  பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.


தொடர்ந்து மாறாத எரிபொருள் விலை 


சென்னையில் இன்று (மார்ச் 8) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 291வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். 


இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  


இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.