Breaking News LIVE: மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவியுங்கள் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Breaking News Live : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.

கீர்த்தனா Last Updated: 07 Mar 2023 08:56 PM
மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவியுங்கள் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

Breaking News LIVE: பா.ஜ.க. நிர்வாகிகள் உணர்ச்சி வசப்பட கூடாது - கே.அண்ணாமலை அறிவுரை!

பா.ஜ.க. நிர்வாகிகள் யாரும் உணர்ச்சி வசப்பட கூடாது என்றும், கூட்டணி கட்சித் தலைவர்களு தார்மீக மரியாதை வழங்க வேண்டும் என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர்  கே.அண்ணாமலை  தெரிவித்துள்ளார். மேலும், கட்சி கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 


 

Breaking News LIVE: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

டியாகோ கார்சியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, 16 இந்திய மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

Breaking News LIVE: அமேசான் ப்ரைமில் வெளியாகிறது ‘டாடா!’

நடிகர் கவின் நடிப்பில் ’டாடா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மார்ச் 10 -ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஓ. பன்னீர் செல்வத்தை சந்திக்கும் அண்ணாமலை..!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தினை சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறவுள்ளார். 

Breaking News LIVE: கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து பாஜகவினர் போராட்டம்



Breaking News LIVE: புது ஜெர்சியை வெளியிட்டது லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி!



எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பாஜகவினர்...

நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்ற கட்சி என பாஜகவை கடுமையாக விமர்சித்த அதிமுகவை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தினை பாஜகவினர் எரித்து தங்களது எதிர்ப்பினை காட்டியுள்ளனர்.  

அண்ணாமலை கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் சிங்கை ராமசந்திரன்..

நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கி வந்த கட்சி பா.ஜ.க. யார் தயவுமின்றி தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம் அதிமுக என சிங்கை ராமசந்திரன் அண்ணாமலை கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாளை வெளிநோயாளிகள் பிரிவு இயங்காது - ஜிப்மர்..!

ஹோலி பண்டிகையையொட்டி நாளை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

16 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்..!

பிரிட்டிஷ் - இந்திய கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  

ஹோலி பண்டிகை - நாளை ஜிப்மர் மருத்துவமனைக்கு விடுமுறை..

ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE:  விண்வெளி தொழில் பூங்கா அமைக்க உள்ளதாக அரசு அறிவிப்பு!

குலசேகரப்பட்டிணம் அருகே விண்வெளி எரிபொருள் பூங்கா அமைக்க உள்ளதாக  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மின்னனு, பொறியியல் கட்டமைப்புகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய தொழிற்பூங்காக்கள் அமைக்கத் திட்டம். இதற்கென் ஆலோசனை குழு அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது நல்லது தானே - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

அண்மையில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில்  பாஜக நிர்வாகிகள் இணைந்தனர். அதுகுறித்து  ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது நல்லது தானே எனவும், பாஜக வளர்ந்து வருகிறது என்றும்  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

என்.எல்.சி க்கு ஒரு தரகராக வேளாண் துறை அமைச்சர் செயல்பட்டு வருகிறார் - அன்புமணி ராமதாஸ்..!

தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் என்.எல்.சியின் தரகராக செயல்படுகிறார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சென்னை அடையாரில் நடைபெற்றது. அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, “


டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று எதிர் கட்சி தலைவராக இருந்த போது ஸ்டாலின் சொன்னார். இப்போது அவர் கையில் அதிகாரம் உள்ளது, ஆனால் ஒரு கடையை மூடவில்லை. ஆன்லைன் கேம்ளிங்க்கு ஆடினன்ஸ் கையெழுத்து போட்ட ஆளுநர் , மசோதாவிற்கு இன்னும்  கையெழுத்து போடவில்லை. ஆடியன்ஸ்க்கும் , மசோதாவிற்கும் இடையில் 1 அரை  மாதம் தான் இடைவெளி , அந்த இடைவெளியில் என்ன நடந்தது? என்.எல்.சி நிர்வாகத்திற்காக விவசாயிகளிடம் இருந்து இடத்தை பிடிங்கி என்.எல்.சிக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கப்படுகிறது. என்.எல்.சி க்கு ஒரு தரகராக வேளாண் துறை அமைச்சர் செயல்பட்டு வருகிறார். காவல் துறையை வைத்து அச்சுறுத்தி , மிரட்டி நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர். 25 ஆயிரம் விளை நிலங்களை அரசு பாதுகாக்க வேண்டும். என்.எல்.சியை நிலம் கையகப்படுத்த நாங்கள் விடமாட்டோம்” இவ்வாறு அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியுள்ளார். 

Breaking News LIVE : வீட்டு வரி நிர்ணயிக்க லஞ்சம் பெற்ற வருவாய் துறை அதிகாரி கைது!

கரூர் மாணிக்கம் என்பரது வீட்டிற்கு வீட்டு வரி நிர்ணயிக்க ரூ.20,000 லஞ்சம் பெற்ற வருவாய் துறை அலுவலர் ரவிச்சந்திரன், அவருக்கு உதவியாக இருந்த தேநீர் கடை உரிமையாளாரும் கைது செய்யபப்ட்டுள்ளனர்.


 

Breaking News LIVE : வீட்டு வரி நிர்ணயிக்க லஞ்சம் பெற்ற வருவாய் துறை அதிகாரி கைது!

கரூர் மாணிக்கம் என்பரது வீட்டிற்கு வீட்டு வரி நிர்ணயிக்க ரூ.20,000 லஞ்சம் பெற்ற வருவாய் துறை அலுவலர் ரவிச்சந்திரன், அவருக்கு உதவியாக இருந்த தேநீர் கடை உரிமையாளாரும் கைது செய்யபப்ட்டுள்ளனர்.


 

Breaking News LIVE: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்!



Breaking News LIVE : தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

நாளை முதல் 10ஆம் தேதி தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Breaking News LIVE : பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் டி.ஆர். பாலு எம்.பி. சந்திப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு சந்திப்பு. பீகாரைச் சேர்ந்த குழு தமிழ்நாட்டில் ஆய்வு செய்து வரும் நிலையில்,  முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி நிதிஷ் குமாரை சந்தித்து விளக்கம் அளித்தார் டி.ஆர்.பாலு

Breaking News LIVE: 3 யானைகள் பலி: அவசரமாக விசாரிக்கும் உயர் நீதிமன்றம்

தருமபுரி அருகே மின்வேலியில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் இறந்த வழக்கை அவசரமாக உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது. விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் முறையீட்டை ஏற்று பிற்பகலில் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது.

Breaking News LIVE: பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த திலீப் கண்ணன்

பாஜக  தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகிய திலீப் கண்ணன் அதிமுகவில் இணைந்தார்

Breaking News LIVE: முதலமைச்சர் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது. ஏற்கெனவே ஈரோடு மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில் நிலையில் தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை புகார் அளித்துள்ளார்.

Breaking News LIVE: கலவரம் மூலம் திமுக ஆட்சியை அகற்ற சதி... முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு

நாகர்கோவிலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முழு உருவ சிலையைத் திறந்துவைத்த பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலவரத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைத்து தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று வருகிறோம். அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும்” எனப் பேசியுள்ளார்.

Breaking News LIVE: வட இந்தியர்கள் பற்றிய வதந்தி: பாஜக நிர்வாகி சென்னை உயர் நீதிமன்றத்தை நாட உத்தரவு

வட இந்தியர்கள் பற்றி வதந்தி பரப்பப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரிய உத்தரப் பிரதேசா பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவின் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு. சென்னை உயர் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

Breaking News LIVE : தங்கம் விலை குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ 41,880 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,235 ஆக விற்பனையாகிறது.

Breaking News LIVE: பாஜக தலைவர் நட்டா தமிழ்நாடு வருகை

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா 10ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரியில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை ஜே.பி.நட்டா திறந்து வைக்கவுள்ளார்.

Breaking News LIVE : இன்று முதல் மதுரை வழியாக மீண்டும் ரயில்கள் இயக்கம்

தென்மாவட்ட ரயில்கள் ஒரு மாதத்திற்கு பின் இன்று முதல் மதுரை ரயில் நிலையம் வழியாக மீண்டும் இயக்கப்படுகிறது. மதுரை - திருமங்கலம் இடையேயான இரட்டை அகலப்பாதை பணிகள் நிறைவுபெற்றதால் இன்று முதல் இயக்கப்படுகிறது.

Breaking News LIVE: கோலிலூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது

ஆலங்குடி, கோவிலூரில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

Breaking News LIVE : மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த காளி கவுண்டன் கொட்டாய் பகுதியில் மின் வேலியில் சிக்கி 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அறிந்த பாலக்கோடு வனத்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Breaking News LIVE : சென்னையில் தனியார் நகரப் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு

சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவை திரும்பை பெற வலியுறுத்தியும்,  தனியார் நகரப் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்தும் தொமுச உள்ளிட்ட 9 அமைப்புகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளன.


 

Breaking News LIVE : கோடை கால ஏற்பாடுகள் - பிரதமர் மோடி ஆலோசனை

கோடை காலத்தை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Breaking News LIVE : விமானத்தில் அவசரக் கதவை திறக்க முயன்றவர் கைது

அமெரிக்க விமானத்தில் உள்ள அவசரக் கால கதவை நடுவானில் திறக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவசர கால கதவை திறக்க முயன்றதை தடுத்த விமானப் பணியாளரை தாக்கிய புகாரிலும் டாரஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Breaking News LIVE : கோவையில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு

கோவையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு

Breaking News LIVE: ’தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் முக்கியமானது தோள்சீலைப் போராட்டம்’ - முதலமைச்சர் ஸ்டாலின்

தோள் சீலைப் போராட்டத்தின் 200ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட நிலையில், தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் முக்கியமானது தோள் சீலை போராட்டம் எனத் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE : வயதான தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. தகுதியுடையோர் www.tamilvalarchithurai.in என்ற இணையதளத்தில் மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கோரப்பட்டுள்ளது.

Breaking News LIVE : 10 லட்ச ரூபாய் மோசடி செய்த திமுக கவுன்சிலர் கைது

மதுரையில் சீட்டுத்தொகையாக 10 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்த திமுக கவுன்சிலர் சுப்பிரமணியம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Breaking News LIVE : மங்களாபுரம் ஜல்லிக்கட்டில் 33 பேர் காயம்!

புதுக்கோட்டை, ஆலங்குடி மங்களாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 539 காளைகள், 230 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில், காளைகள் முட்டியதில் 33 பேர் காயமடைந்தனர்.


 

Breaking News LIVE: வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்: போலி வீடியோ வெளியிட்ட பீகார் நபர் கைது

தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோ வெளியிட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமன் குமார் என்பவர் கைது. மேலும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Background

சென்னையில் தொடர்ந்து 290ஆவது நாளாக மாற்றமில்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். 


உலகமே எரிபொருளை மைய்யமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவுக்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம். 


இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.


தொடர்ந்து மாறாத விலை 


இந்நிலையில், சென்னையில் இன்று (மார்ச்.07) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி 290ஆவது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். 


இதனை கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  


இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.