Breaking News LIVE : வதந்தி வீடியோ பரப்பியவர் பீகாரில் கைது
Breaking News Live : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாவட்ட வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தென் மாவட்டத்தை தொழில் ரீதியாக மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராமப்புற மக்களின் வருமானத்தை பெருக்கும் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை மதிமுக வெளியிட்டுள்ளது. அதில், திருமா மீது வைகோ வருத்தம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"பேட்டியில் வைகோ பெயரை குறிப்பிட்டு கேட்டபோது, திருமாவளவன் அதை கடந்து சென்ற விதம் வருத்தம் அளிக்கிறது. எம்ஜிஆரை தவிர பிற தமிழ்நாட்டு தலைவர்கள் பற்றி விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நம்பிக்கை இழந்துவிட்டதாக திருமாவளவன் கூறியது நியாயம்தானா. ஈழத்தமிழர் நலனுக்காக தம் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் வைகோ" என மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ராசேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திரிபுராவின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் மாணிக் சாஹா. திரிபுரா பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், மாணிக் சாஹா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை பரப்பி வதந்தி ஏற்படுத்திய பீகாரின் ஜமுன் மாவட்டத்தைச் சேர்ந்த அமன்குமார் என்பவரை பீகார் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கிற்கு நேரடி விமான சேவை தொடங்க நடவடிக்கை : மத்திய அமைச்சர்
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா கடிதம் எழுதியுள்ளார்.
கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு அதிமுக இப்படி செய்திருக்கக் கூடாது. 4 ஆண்டுகாலம் ஏமாற்று பேர்வழிகளாக வலம் வந்தவர்களின் கதைகள் எல்லாம் ஊரறிந்த கதை என எடப்பாடி பழனிசாமி குறித்து அமர்பிரசாத் ரெட்டி விமர்சனம்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 25ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி - அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
எடப்பாடி பழனிசாமி ஏமாற்று பேர்வழி என்று பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளரும், அண்ணாமலை நண்பருமான அமர்பிரசாத் ரெட்டி விமர்சனம்.
பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் தலைவராக இருந்த நிர்மல்குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்கு அண்ணாமலை ஆதரவாளர் கண்டனம்.
பரஸ்பர மரியாதை பயணம் என்ற பெயரில் சர்வதேச அளவில் நடிகர் அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம். லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை முடித்தபின் சர்வதேச மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
2-வது கட்டமாக உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அஜித் முடிவு
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அச்சப்படும் சூழ்நிலை ஏதும் இல்லை என பீகார் காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளனர்.
ஹோலி பண்டிகைக்காக மட்டுமே புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்கின்றனர் - ஜிதேந்திர சிங்
ஆசியாவில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையத்திற்கு 2 ஆம் இடம் பெற்றுள்ளது.
பாஜக தொண்டர் கைது செய்யப்பட்டால் அவருக்கு கட்சியில் இருந்து எந்த சட்ட உதவியும் செய்வது இல்லை. சட்ட உதவி செய்பவர்களை, ஏன் உதவி செய்கிறீர்கள் என்று மிரட்டல்தான் வருகிறது என திலீப் கண்ணன் குற்றச்சாட்டு
நான் சொன்னது உண்மையா, பொய்யா என்பது கட்சியின் உள்ளே இருக்கும் 90% நிர்வாகிகளுக்கு தெரியும். வெளியில் உள்ள சமூக ஊடக நண்பர்களுக்கு அண்ணாமலை புனிதராகத்தான் தெரிவார்.
இன்னும் இந்த வார் ரூம் கோஷ்டிகள் என்னைப் போல எத்தனை பேரை வெளியே அனுப்பப்போகிறது என்பதை பார்ப்போம். தவறு எங்கே நடக்கிறது என்பதை ஒரு முறை யோசித்து விட்டு என்னை திட்டுங்கள் என திலீப் கண்ணன் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளார் பொறுப்பில் இருந்து விலகுவதாக திலீப் கண்ணன் அறிவித்துள்ளார்.
சொந்தக் கட்சியில் இத்தனை ஆண்டு உழைத்தவனை உளவு பார்ப்பதுதான் அண்ணாமலையின் வேலை - திலீப் கண்ணன்
தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளார் பொறுப்பில் இருந்து விலகுவதாக திலீப் கண்ணன் அறிவித்துள்ளார்.
சொந்தக் கட்சியில் இத்தனை ஆண்டு உழைத்தவனை உளவு பார்ப்பதுதான் அண்ணாமலையின் வேலை - திலீப் கண்ணன்
டெல்லியில் புதிய மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் முடிந்த நிலையில் மார்ச் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு
அரசு திட்டப்பணிகளை துரிதப்படுத்த ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஆட்சியர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவல் தவறானது எனவும் நகரப் பேருந்துகளில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் தொடரும் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், மாநகரப் பேருந்துகளை தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.
சென்னை போரூரில் நாம் தமிழர் மற்றும் ஆதி தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். 5 பேருக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னையில் மார்ச் 10ஆம் தேதி அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி குன்னூர் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். கேஸ் கசிவை சரி செய்தபோது சிலிண்டர் வெடித்ததில் கேஸ் நிறுவன ஊழியர் நடராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ 42,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.5,250 ஆக விற்பனையாகிறது.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
Background
சென்னையில் தொடர்ந்து 288வது நாளாக மாற்றமில்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
உலகமே எரிபொருளை மைய்யமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.
தொடர்ந்து மாறாத எரிபொருள் விலை
அதன்படி சென்னையில் இன்று (மார்ச் 6) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை நிர்ணயம் தொடர்ந்து விலை மாற்றமின்றி 288வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.
இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -