Breaking News LIVE: ஹோலி பண்டிகை கொண்டாட்டம்; கோயம்புத்தூரில் இருந்து பாட்னாவிற்கு சிறப்பு ரயில்
Breaking News Live : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.
கோலி பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூரில் இருந்து பாட்னாவிற்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் யார் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக செய்தி பரவிய நிலையில், சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பீகார் மாநில பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர்.
சென்னை தேனாம்பேட்டையில், மரம் விழுந்ததில் ஆட்டோவில் பயணம் செய்த பெண் உயிரிழந்தார்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரசுப் பேருந்தில் பயணித்த அவுரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில், வதந்தி பரப்பிய பிரசாந்த் உமாவை கைது செய்ய டெல்லி விரைந்தது, திருச்செந்தூர் டி.எஸ்.பி வசந்தராஜ் தலைமையிலான காவல்படை
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஆய்வு மேற்கொள்வதற்காக பிகார் அதிகாரிகள் தமிழ்நாடு வந்துள்ளனர்.
சென்னை திருமங்கலத்தில் உள்ள எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. ஷோரூமில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாலா அருகே லாரியும் பேருந்தும் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர்
அதிமுக என்ற இயக்கத்தை திமுகவிடம் அடகு வைக்கவும், தனித்தன்மையை சீர்குலைக்கவும் ஓபிஎஸ் முயல்கிறார் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெறும் 4 பேரை உடன் வைத்துக்கொண்டு ஓபிஎஸ் தன்னை மறந்து புத்தி தடுமாறி உளறுவதாக விமர்சித்துள்ளார்.
வருகிற 9 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்தபிறகு நடைபெறும் முதல் கூட்டம்.
டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஜாமீன் மனு வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள் என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் தெற்கு தியாகி குமரன் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் ஜேக்கப் (31). இவர் திமுகவின் ஊடக செயற்பாட்டாளராகவும், புகைப்பட கலைஞராகவும், What A Karavad என்னும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை மறைமலைநகர் பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவரது நண்பரான ஜீவா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கனரக லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அவர்களை மீட்ட சக பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதில் ஸ்டாலின் ஜேக்கப் உயிரிழப்பிற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர்களது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் ஸ்டாலின் ஜேக்கப்பின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான கோயம்புத்தூர் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்: முதல்வருடன் ஸ்டாலின், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை.
கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் "ஆங்கில நண்பன்" என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவிகள் இருவர் ராயனூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், சரளமான ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினர். கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெண் குழந்தைகள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் குறித்து ஆங்கிலத்தில் கம்பீரமாக எடுத்துரைத்த மாணவிகளை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இருவருக்கும் புத்தகங்களை பரிசளித்தார்.
சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வீடியோக்கள் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர் அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாநகர காவல் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் பரவுவது போல திருப்பூரில் எந்தவித சம்பாத சம்பவங்களும் நிகழ்வதில்லை , கள நிலவரம் அமைதியாகவே உள்ளது அதை தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைம் காவல்துறை சார்பில் தனி படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் காரணமாக திருப்பூரில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் அடைய அச்ச உணர்வு ஏற்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு பின்னலாடை நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் நேரில் சந்தித்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புகார் கட்டுப்பாட்டு அறை மற்றும் தொடர்பு எண் குறித்தும் விளக்கி கூறி வருகின்றனர்.
வட மாநில தொழிலாளர்களுக்கான பிரத்யேக உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது எனவும் ஏதேனும் பிரச்சனையெனில் 94981-01300, 0421-2970017 என்ற எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் திருப்பூர் எஸ்.பி. சஷாங்க் சாய் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு - பெங்களூருவில் கொள்ளையர்களில் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருந்து நிறுவன பிரதிநிதி வினோத் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கச்சத்தீவு திருவிழாவின் 2வது நாளில் புனித அந்தோணியார் ஆலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்த பொதுமக்கள் - தமிழ், சிங்கள மொழி இறைப்பாடல்களுடன் நடந்த பிரார்த்தனையில் ஏராளமான மக்கள் பங்கேற்பு
காஞ்சிபுரத்தில் இன்று அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகள் நடக்கும்
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 8 முதல் ரூ.10 விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் 2 வாரங்களாக பெரிய வெங்காயத்தின் விலை குறைந்து வருவதாக வியாபாரிகள் தகவல்.
அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.11 லட்சம் பெற்று மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி, கார் ஓட்டுநர் விஜய் ஆகியோர் சென்னையில் கைது
திருச்சி காவிரி ஆற்றுப்பாலம் 6 மாதங்களுக்குப் பிறகு முழுமையான போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறப்பு - ரூ.6.84 கோடியில் சீரமைக்கப்பட்ட பாலத்தை அதிகாலையில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திறந்து வைத்தார்.
Background
சென்னையில் தொடர்ந்து 9 மாதங்களுக்கும் மேலாக மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படும் பெட்ரோல்,டீசலின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம்.
உலகமே எரிபொருளை மைய்யமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.
தொடர்ந்து மாறாத விலை
அந்த வகையில், இன்று (மார்ச் 4) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை நிர்ணயம் தொடர்ந்து விலை மாற்றமின்றி 287வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.
இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -