Cow Dung Export: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாட்டுச் சாணத்தின் விலை, கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ.50 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது.
மாட்டுச் சாணம் ஏற்றுமதி:
இந்தியாவில், பசுக்கள் பல நூற்றாண்டுகளாக வணங்கப்பட்டு, அவற்றின் பால் அத்தியாவசிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதன் சாணம் பல பண்புகளைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக இது விவசாயத்தில் உரமாக பயன்படுத்தப்படுகிறது. பசுவின் சாணத்தை உரமாகப் பயன்படுத்தும் பல விவசாயிகளை நீங்கள் நாட்டில் காணலாம். ஆனால், தற்போது வெளிநாடுகளிலும் இந்தப் போக்கு தொடங்கியுள்ளது. இதனால், பசுவின் சாணத்திற்கும் அதிக தேவை உள்ளது. இதன் காரணமாக அரபு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளுக்கு, இந்தியா மாட்டு சாணத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த ஏற்றுமதி வெறும் 10 அல்லது 20 கோடி ரூபாய் அல்ல, பல நூறு கோடி ரூபாய் என்பது ஆச்சரியமளிக்கக் கூடிய விஷயமாகும்.
இந்தப் போக்கு இந்தியாவுக்கும், இறக்குமதி செய்யும் நாடுகளுக்கும் பயனளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, இது விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு மற்றும் கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கிறது. நமது நாட்டில் சுமார் 300 மில்லியன் கால்நடைகள் உள்ளன. அவை ஒவ்வொரு நாளும் சுமார் 30 மில்லியன் டன் சாணத்தை உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
2023-24ல் ஏற்றுமதி மதிப்பு?
எக்ஸ்பீடியா அறிக்கையின்படி, 2023-24 ஆம் ஆண்டில், இந்தியா மொத்தம் 125 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய மாட்டுச் சாணத்தை ஏற்றுமதி செய்துள்ளது. இது தவிர ரூ.173.57 கோடி மதிப்பிலான மாட்டு சாணம் உரம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 88.02 கோடி மதிப்புள்ள பசுவின் சாணம் உரமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த மொத்த எண்ணிக்கையையும் சேர்த்தால் சுமார் 386 கோடி ரூபாய் இருக்கும். அதாவது ஒரு வருடத்தில் இந்தியா 386 கோடி ரூபாய் மதிப்புள்ள சாணத்தை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது. ஒரு கிலோ மாட்டு சாணத்தின் விலை ரூ.30 முதல் ரூ.60 வரை நிர்ன்ணயிக்கப்படுகிறது.
பசுவின் சாணத்தை அதிகம் வாங்கும் நாடுகள்:
இந்தியாவில் இருந்து மாட்டு சாணத்தை வாங்கும் முதல் 10 நாடுகளைப் பற்றி பேசினால், மாலத்தீவு முதலில் வருகிறது. இதற்குப் பிறகு அமெரிக்காவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனா நான்காவது இடத்திலும், நேபாளம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. மாட்டுச் சாணத்தை வாங்கும் நாடுகளின் பட்டியலில், பிரேசில் 6வது இடத்திலும், அர்ஜென்டினா 7வது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா 8வது இடத்திலும், குவைத் 9வது இடத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) 10வது இடத்திலும் உள்ளது.
சாணத்தை அரபு நாடுகள் என்ன செய்கின்றன?
பசுவின் சாணம் பெரும்பாலும் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அரபு நாடுகளில் இந்த விவசாயம் காய்கறிகள் மற்றும் தானியங்களுக்காக அல்ல, பேரிச்சம்பழத்திற்காக. இங்குள்ள பெரிய விவசாயிகள் இந்தியாவில் இருந்து மாட்டு சாணத்தை ஆர்டர் செய்து, அதை தூள் செய்து பனை மரங்களின் வேர்களுக்கு அடியில் விதைக்கின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, இதைச் செய்வதன் மூலம், பேரிச்சம்பழங்களின் விளைச்சல் அதிகரிக்கிறது. சீனா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில், பசுவின் சாணம் மின்சாரம் மற்றும் பயோகேஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.