Breaking News LIVE: பல்வேறு மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மா உள்ளிட்ட கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காங்கிரசும் புறக்கணிக்க திட்டம்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுகளுக்கு 4 நாள் ஏரியா சபை கூட்டம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
டெல்லி அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் சரியான நேரத்துக்கு மூடப்படுகின்றதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பதை மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தி, இயற்கை சீற்ற நேரத்தில் அவசர கால பணிகளை மேற்கொள்ள சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த காந்தி திருவள்ளூர் மாவட்டத்துக்கும், திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும், சேலத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு, தேனிக்கு ஐ.பெரியசாமி, நாகை,மயிலாடுதுறை பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் நியமனம், கோவைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நியமனம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றடைந்தார்.
குடிமை பணி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. முதல் 4 இடங்களை மகளிரே பிடித்துள்ளனர்
2022ஆம் ஆண்டு யுபிஎஸ்சி நடத்திய குடிமைப் பணித் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் 4 இடங்களை மகளிர் பெற்றுள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 933 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குடிமை பணி தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின
UPSC Results Out : யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகின
2022-ஆம் ஆண்டு யுபிஎஸ்சி நடத்திய குடிமை பணி தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின
மறைந்த நடிகர் சரத் பாபு உடலுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் சரத்பாபு உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாட்டில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளார் மாநாட்டிற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கச் செல்கிறேன் என 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் செல்வதற்கு முன்னர் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் அடங்கிய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 45,160-க்கு விற்பனையாகி வருகிறது. 22 கேரட் ஆபரணத்தத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ.5,645-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 6,111 ரூபாயாகவும், ஒரு சவரன் 48,888 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் 60 காசுகள் குறைந்து ரூ.78.00 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிலோ ரூ.78,000-க்கு விற்பனையாகிறது.
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்புடைய 2 கிலோ தங்கப் பசை, தங்கச் செயின்களை சுங்கத்துறையினர், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து, இலங்கையைச் சேர்ந்த 4 பெண் பயணிகள் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு இன்று புறப்படுகிறார்.
அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாய மொழிப் பாடமாக இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அதன்படி, 2024-2025ம் கல்வியாண்டிற்குள் மாநில பாடத்திட்டத்தை தவிர, அனைத்து வாரியங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி அன்று வெளியாகின. மொத்தம் 9,14, 320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில் 8,35, 614 பேர் தேர்ச்சியடைந்தனர். மொத்தம் 78,706 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
இதனைத் தொடந்து தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டது. அதன்படி ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கு மாணவர்கள் இன்று (மே 23ஆம் தேதி) முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் நடக்கும் ப்ளே - ஆஃப் போட்டிகளை பார்க்க மெட்ரோவில் பயணம் மேற்கொள்பவர்கள் டிக்கெட் எடுக்க வேண்டும் என மெட்ரோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளே - ஆஃப் போட்டிகள் பிசிசிஐ நடத்துவதால் மெட்ரோவில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் (70) உடல்நலக்குறைவால் காலமானார். தொழிலதிபராக இருக்கும் கருமுத்து கண்ணன் மீனாட்சி அம்மன் கோயில் அரங்காவலராக 15 ஆண்டுகள் செயல்பட்டுள்ளார்.
Background
Petrol, Diesel Price: சென்னையில் மாற்றமின்றி ஓர் ஆண்டை கடந்துள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம்.
எரிபொருளின் அவசியம்
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (மே.23) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 367 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -