Breaking News LIVE: விஷச்சாராய விவகாரம் - வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு 

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 22 May 2023 07:33 PM
Breaking News LIVE: நடிகர் சரத் பாபு மறைவுக்கு பிரதமர் இறங்கல்..!

தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத் பாபு காலமானதை அடுத்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இறங்கல் தெரிவித்துள்ளார். 


 





Breaking News LIVE:இபிஎஸ் மீது காவல்நிலையத்தில் புகார்

சேலத்தில் ஓபிஎஸ் தரப்பு ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் இபிஎஸ் ஆதரவாளர்கள் கலவரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக இபிஎஸ் உள்ளிட்ட 30 பேர் மீது எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: விஷச்சாராய விவகாரம் - வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பம் விஷச்சாராய வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு - 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகள் தேடப்பட்டு வரும் நிலையில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: மாணவர்களுக்கு கல்வி போதிப்பதே ஆசிரியரின் நோக்கம் ; சென்னை உயர்நீதிமன்றம்

திருத்துறைப்பூண்டியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இடமாறுதல் உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு - 
தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது நோக்கம் அல்ல.. மாணவர்களுக்கு கல்வி, திறமைகளை போதிப்பது தான் ஆசிரியர் பணியின் நோக்கம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து 

Breaking News LIVE: திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் - எடப்பாடி பழனிசாமி  குற்றச்சாட்டு 

இரண்டு ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடைபெறுகிறது. நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். அரசுக்கு தெரிந்தே கள்ளச்சாராயமும், போலி மதுபானமும் அரசுக்கு தெரிந்தே விற்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 

Breaking News LIVE: ரூ.2000 நோட்டு மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதிகள் - ஆர்பிஐ அறிவுறுத்தல்

ரூ.2000 நோட்டு மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் எனவும், வாடிக்கையாளர்களுக்கு குடிநீர், காத்திருப்பு அறை போன்ற வசதிகளை வங்கிகள் செய்துதர ஆர்பிஐ அறிவுறுத்தல்  - தினமும் எவ்வளவு ரூ.2000 நோட்டுகள் மாற்றப்படுகின்றன என்பது குறித்த தகவல்களை முறையாக சேகரிக்க அறிவுரை

Breaking News LIVE:மின் வாரியத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரிந்தோரின் வாரிசுகளுக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பணி காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. 

Breaking News LIVE: மதுரையில் ரூ.96 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் 

துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த கீழக்கரையைச் சேர்ந்த நசீம் என்பவரிடம் ரூ.96 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - பேஸ்ட் வடிவிலான தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை 

Breaking News LIVE: கர்நாடகா சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடக்கம்

கர்நாடகா அமைச்சரவையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், 8 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது - மே 25 ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். 

Breaking News LIVE: அதிமுக கலவர வழக்கு ஆவணங்கள் இன்று ஒப்படைப்பு

அதிமுக அலுவலக கலவரத்தின் போது ஓபிஎஸ் தரப்பினரால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் இன்று ஒப்படைக்கப்படுகிறது - நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் பெற்றுக் கொள்கிறார். 

Breaking News LIVE: ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

போலி மதுபானம், கள்ளச்சாராய இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து மனு அளிக்கிறார். 

Breaking News LIVE: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு - அனுமதி பெறப்பட்டு நினைவேந்தல் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் அஞ்சலி 

Background

Petrol, Diesel Price: சென்னையில் மாற்றமின்றி ஓர் ஆண்டை கடந்துள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம்.


எரிபொருளின் அவசியம் 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி நேற்றோடு ஓராண்டை நிறைவடைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.