Breaking News LIVE: இந்தியாவின் நம்பிக்கை மு.க.ஸ்டாலின் - ஃபரூக் அப்துல்லா புகழாரம்!

Breaking News LIVE in Tamil: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.

ஆர்த்தி Last Updated: 01 Mar 2023 06:49 PM
Breaking News LIVE: இந்தியாவின் நம்பிக்கை மு.க.ஸ்டாலின் - ஃபரூக் அப்துல்லா புகழாரம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா உரையாற்றி வருகிறார். இந்தியாவின் நம்பிக்கை மு.க.ஸ்டாலின் - ஃபரூக் அப்துல்லா

Breaking News LIVE: மதுரை சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து!

மதுரை, மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் மூன்றாவது தளத்தில் தீ விபத்து நிகழ்ந்த நிலையில், கடையிலிருந்த வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் வெளியேற்றப்பட்டதாகத் தகவல்.

சிறுமலையில் காட்டுத் தீ..!

திண்டுக்கல் சிறுமலையில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். 

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத வழக்கு: 7 பேருக்கு மரண தண்டனை; ஒருவருக்கு ஆயுள்: அதிரடி தீர்ப்பு

 கான்பூரில் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக தொடரப்பட்ட வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

Breaking News Live : 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - மார்ச் 3ஆம் தேதி முதல் ஹால் டிககெட்

11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 3ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

Breaking News Live : டெல்லி புதிய அமைச்சர்கள் - ஆளுநர் ஏற்பு

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கைலாஷ் கெலாட், ராஜ்குமார் ஆனந்தை புதிய அமைச்சர்களாக நியமிக்க ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பிய பரிந்துரையை துணை நிலை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

Breaking News Live : சீமை கருவேல மரங்களை வெட்ட ஒப்பந்தம் - தமிழக அரசு

கண்மாய்கள், நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்ட ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிவகங்கை தானிப்பட்டி கண்மாய்கள், அரசு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

Breaking News Live : அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News Live : அதானி குழும நிறுவன பங்குகள் உயர்வு

அதானி குழும நிறுவனங்களின் அனைத்து பங்குகளும் 2வது நாளாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் வியப்படைந்துள்ளனர். அதானி என்டர்பிரைசஸ் பங்கு ரூ.155 உயர்ந்து ரூ.1519.50 ஆகவும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு ரூ.32 உயர்ந்து ரூ.675 ஆகவும் உள்ளன.

Breaking News Live : கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது

தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது.  தமிழகம் முழுவதும் 90 லட்சம் மாடுகள், கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது .

Breaking News Live : டெல்லி புதிய அமைச்சர்கள் - ஆளுநருக்கு பரிந்துரை

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை புதிய அமைச்சர்களாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துணை நிலை ஆளநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Breaking News Live : முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் - குடியரசுத் தலைவர் , குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 

Breaking News Live : ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான மனு நாளை மறுநாள் விசாரணை

ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி உத்தரவுக்கு எதிராக தமிழக  அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

Breaking News Live : இன்றும் உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ 41,880 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.5,235 ஆக விற்பனையாகிறது. 

Breaking News Live : அண்ணா அறிவாலயத்தில் மரக்கன்று நட்டு வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தனது 70வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், தொண்டர்கள் முன்னிலையில் முதலமைச்சர் ஸ்டாலின்  கேட் வெட்டினார் 

Breaking News Live : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு உடல்நலக்குறைவு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பார்வதி என்ற பெண் யானைக்கு ஒருவாரமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

Breaking News Live : 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்விற்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. 12ஆம் வகுப்பு மாணவர்கள் 8 லட்சம் பேரும், 11ஆம் வகுப்பு மாணவர்கள் 8 லட்சம் பேரும் என மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Breaking News Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Breaking News Live : முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை

தனது 70ஆவது பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

Breaking News Live : முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் - ஹேஷ்டேக் டிரெண்டிங்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் ஹேஷ்டேக் ட்விட்டரில் அகில இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. #HBDMKStalin70 என்ற ஹேஷ்டேக் அகில இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. 

Breaking News Live : முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் - ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  70வது பிறந்தநாள் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளுடனும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். 

Breaking News Live : சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சென்னையில் ரூ.1,068 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.1,118க்கு விற்பனையாகிறது.  3 மாநில தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

Background

Breaking News LIVE in Tamil: 


சென்னையில் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகளை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. 


இந்தியா மட்டுமில்லாது உலகமே எரிபொருளை மைய்யமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. இன்னும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் மின்சார உற்பத்தியில் இன்னும் தனக்கு தேவையான அளவிலான மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் அளவிற்கு உயரவில்லை. அதிலும், இந்தியா பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருவதால், முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம். 


சாதாராண மக்கள் வைத்திருக்கும் வாகனங்கள் தொடங்கி அரசு நடத்தும் பொது போக்குவரத்து வரை என பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவறில் இயங்கி வருவதால், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தும். எரிபொருட்களின் விலை உயர்வு என்பது மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் பிரதிபலிக்கும் என்பதால், மாநில அரசுகள் அதிலும் குறிப்பாக பாஜக ஆளாத மாநில அரசுகளே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து வந்தன.


9 மாதங்களை கடந்தும் மாறாத விலை 


கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.


அதன்பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலை 283வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 


அதன்படி இன்று (மார்ச் 1) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறியது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.