Breaking News LIVE: மரக்காணத்தில் விஷ சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 14ஆக உயர்வு..!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 16 May 2023 05:29 PM
Breaking News LIVE: கர்நாடகமாநில முதலமைச்சர் யார்? காங்கிரஸ் கட்சித் தலைவருடன் டி.கே.சிவக்குமார் சந்திப்பு!

டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார் சந்திப்பு

Breaking News LIVE: கர்நாடகமாநில முதலமைச்சர் யார்? காங்கிரஸ் கட்சித் தலைவருடன் டி.கே.சிவக்குமார் சந்திப்பு!

டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார் சந்திப்பு

Breaking News LIVE :கள்ளச்சாராயம் குடித்த மேலும் 2 பேர் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர். 

பள்ளிகள் திறக்கும் நாளன்றே பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவு..!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளன்றே பாடப்புத்தகங்கள், நோட்டுகளை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Breaking News LIVE: கேரளாவில் ஜூன் 4-ஆம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும்

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதில் தாமதமாகும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 1-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் 4-ல் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

Breaking News LIVE: மாணவி அர்ஷியா ஃபாத்திமாவின் சான்றிதலை வழங்க கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு

இளநிலை வெளாண் படிப்பை இடை நிறுத்தம் செய்த அர்ஷியாவின் சான்றுதலை ரூபாய் 2 லட்சம் கட்டினால் மட்டுமே திருப்பி அளிக்கப்படுன் என்று வாசுதேவநல்லூர் எஸ் தங்கப்பழம் வேளாண் கல்லூரி கூறியிருந்த நிலையில் மாணவி தொடுத்த வழக்கில் சான்றிதலை மாணவிக்கு பத்து நாட்களுக்குள் அளிக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Breaking News LIVE: மரக்காணத்தில் விஷ சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 14ஆக உயர்வு..!

சாராயத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

Breaking News LIVE: கர்நாடகா முதலமைச்சர் யார்? - இன்று டெல்லி செல்கிறார் டி.கே.சிவக்குமார் 

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும் பணியில் இழுபறி - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி பயணம்

Breaking News LIVE: ஊராட்சி செயலாளர்கள் 2வது நாளாக போராட்டம்


சென்னை சைதாபேட்டையில் ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் - காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது 

Breaking News LIVE: நியூசிலாந்து விடுதியில் தீ விபத்து - 10 பேர் பலி

நியூசிலாந்து நாட்டின் மத்திய வெலிங்டனில் உள்ள விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு - மேலும் 90 பேர் விடுதிக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம் 

Breaking News LIVE: பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் இடையே மோதல் - 16 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின இனக்குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழப்பு - நிலக்கரி சுரங்கங்களை பிரித்து கொள்வதில் 2 குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் 

Breaking News LIVE: டிரான்ஸ்பார்மரில் சிக்கிய காற்றாடியால் சிறுவன் படுகாயம்

சென்னை பூவிருந்தவல்லியில் டிரான்ஸ்பார்மரில் சிக்கிய காற்றாடியை மீட்க ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம் - சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி 

Breaking News LIVE: சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை சரியானது - பயணிகள் நிம்மதி

கடற்கரை - தாம்பரம் செல்லக்கூடிய ரயில் சேவை இரண்டாவது நடைமேடையில் மீண்டும் ரயில் சேவை வழக்கம் போல் தொடங்கியது. சைதாப்பேட்டை ரயில் நிலையம் வந்த சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயிலின் பெட்டிகள் பாதியில் கழன்றதால் சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Breaking News LIVE: சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி

சென்னை கடற்கரை - தாம்பரம் வழியில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு - சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலின் 4 பெட்டிகள் கழன்றதால், ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். 

Breaking News LIVE: கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு - உறவினர்கள் அச்சம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு - ஏற்கனவே 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல் என்பவரும் உயிரிழந்ததால்,  சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர். 

Background

சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி  ஓராண்டை நெருங்கி கொண்டிருக்கும்  பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம். 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.16) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 360வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.