Breaking News LIVE:தமிழ்நாட்டிற்கு ரூபாய் 5,796 கோடி வரி பகிர்வு

Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.

முகேஷ் Last Updated: 10 Mar 2023 09:43 PM
தமிழ்நாட்டிற்கு ரூபாய் 5,796 கோடி வரி பகிர்வு

ஜி.எஸ்.டி. வரி பகிர்வாக தமிழ்நாட்டிற்கு ரூபாய் 5 ஆயிரத்து 769 கோடியை மத்திய அரசு பகிர்ந்து அளித்துள்ளது. 

Breaking News LIVE: காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் சனிக்கிழமை (நாளை) இயங்கும் என்று அறுவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை அனைத்து வகையான பள்ளிகளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE: வணிக வரித்துறையில் 1,000 பேருக்கு பதவி உயர்வு !

வணிக வரித்துறையில் 1,000 பேருக்கு பதவி உயர்வு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்ததன்படி, உதவியாளர்களாக உள்ள 1000 பேருக்கு பதவி உயர்வு. பணி மூப்பு அடிப்படையில் உதவியாளர்களாக உள்ள ஆயிரம் பேர் வணிகவரி துணை அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

Breaking News LIVE: இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பு; ஜி.வி.பிரகாஷ் மேல்முறையீடு - வருமான வரித்துறை பதில் அளிக்க ஆணை!

இசை படைப்புகளுக்கு சேவைவரி செலுத்த ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் மேல்முறையீடு; காப்புரிமைக்கு தயாரிப்பாளர்கள் உரிமையாளர் ஆகிவிடுவதால் தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் என வாதம்!

ஆன்லைன் ரம்மி - இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு

ஆன்லைன் ரம்மியால் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி.க்கு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அ.தி.மு.க - பா.ஜ.க. இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை - முன்னாள் அமைச்சர் உதயகுமார்

அ.தி.மு.க. பா.ஜ.க. இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

நாகப்பட்டினத்தில் மீண்டும் கச்சா எண்ணெய் குழாயில் கசிவு

நாகப்பட்டினம் பட்டினச்சேரி கடற்கரையில் மீண்டும் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது.

Breaking News LIVE: டாஸ்மாக் டெண்டர் விவகாரம்: அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி..!

1000 கோடி ரூபாய் மதிப்பிலான டாஸ்மாக் பாக்ஸ் டென்டர்களை ரத்து செய்ய அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்திருந்தது.


தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.


இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "மாநிலம் முழுவதிலும் 41 டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான டெண்டரின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.96 கோடி மட்டுமே. அறப்போர் இயக்கம் சொல்வது போல ரூ.1000 கோடி இல்லை. இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு தவிர்த்து பிற மாவட்டங்களில் டெண்டர் கோரப்பட்டது.

Breaking News LIVE: நோன்பு கஞ்சி தயாரிக்க ரூ.25 கோடியே 63 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பச்சரிசி விநியோகம்!

நோன்பு கஞ்சி தயாரிக்க ரூ.25 கோடியே 63 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பச்சரிசி விநியோகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தாமரை விரைவில் மலரும் - ஜே.பி. நட்டா..!

தமிழ்நாட்டில் விரைவில் தாமரை மலரும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார். 

Breaking News LIVE: ’ஆளுநருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது எனத் தெரியவில்லை’ - சபாநாயகர் அப்பாவு தாக்கு

 “ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமலிருக்க ஆளுநருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது எனத் தெரியவில்லை. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அரசின் சட்டத்துக்கு ஆளுநர் எதிராக இருந்துள்ளார்” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE : எந்தச் சட்டத்தை வைத்து ஆளுநர் கூறுகிறார்? சபாநாயகர் கேள்வி

"ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவை நிறைவேற்ற பேரவைக்கு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க பேரவைக்கு அதிகாரமில்லை என எந்தச் சட்டத்தை வைத்து ஆளுநர் கூறுகிறார்?" என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.


 

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது..

இந்தியாவுக்கும் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவரை இந்திய எல்லைப் பகுதி படை கைது செய்தது. கடந்த இரண்டு நாட்களில் ஊடுருவ முயன்ற 3வது நபரை கைது செய்தனர். 

கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை.. சவரனுக்கு ரூ.280 உயர்ந்து விற்பனை..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ 41,520 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,190 ஆக விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ 44,416 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு  ரூ. 5,552 ஆக விற்பனையாகிறது. 

ராமேஸ்வரம்: 20 கிலோ அளவு கஞ்சா கரை ஒதுங்கியது...

ராமேஸ்வரம்: சேரான்கோட்டை கடற்கரையில் சுமார் 20 கிலோ அளவு கஞ்சா கரை ஒதுங்கியுள்ளது. இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பொட்டளங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

டெல்லி பீகாரில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..

லாலு பிரசாத் மீதான வழக்கு தொடர்பாக டெல்லி பீகாரில் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாலு பிரசாத் யாதவ் அமைச்சராக இருந்த போது ரயில்வே வேலையில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

திமுக கூட்டணியின் இணக்கமாக இருக்கிறோம் .. திருமாவளவன் பேட்டி..

திமுக கூட்டணியில் வலிமையாக நல்ல இணக்கத்துடன் இருக்கிறோம் என திருமாவளவன் கூறியுள்ளார். அகில இந்திய அளவில் இந்த கூட்டணியை கொண்டு செல்லவே அடுத்தக்கட்ட பணி என குறிப்பிட்டுள்ளார். 

என்.எல்.சிக்கு எதிராக போராடும் மக்களை தமிழக அரசு ஒடுக்குவதாக ஈபிஎஸ் கண்டனம்..

என்.எல்.சிக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவுவதாகவும், காவல்துறையை விட்டு குரல்வளையை நசுக்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 3வது அனல் மின் நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி உடனடியாக கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

என்.எல்.சிக்கு எதிராக போராடும் மக்களை தமிழக அரசு ஒடுக்குவதாக ஈபிஎஸ் கண்டனம்..

என்.எல்.சிக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவுவதாகவும், காவல்துறையை விட்டு குரல்வளையை நசுக்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 3வது அனல் மின் நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி உடனடியாக கைவிட வேண்டும் என எடப்பாடி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சீன அதிபராக 3வது முறையாக ஸி ஜின்பிங் தேர்வானார்..!

சீன நாட்டின் அதிபராக 3வது முறையாக ஸி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

புரோ ஹாக்கி லீக்: இந்தியா - ஜெர்மனி அணிகள் இன்று மோதல்

9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டியில் இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதுகிறது.

சம வேலை சம ஊதியம் இன்று கருத்துக்கேட்பு

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. 

காஞ்சிபுரம் :- ஏடிஎம் கடப்பாரை மூலம் கொள்ளை முயற்சி ரோந்து பணிகள் போலீசார் வந்ததால் தப்பி ஓட்டம்

காஞ்சிபுரம்: திம்மராஜம்பேட்டையில் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரை மூலம் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி 

தொலைதூர கல்வி படிப்பு - இன்று ஹால்டிக்கெட் பதிவேற்றம்

சென்னை பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 2022க்கான தொலைதூர கல்வி படிப்புகளுக்கான ஹால் டிக்கெட் இன்று மாலை பதிவேற்றம். 

காய்ச்சலை தடுக்க இன்று 1000 இடங்களில் முகாம்..!

தமிழ்நாட்டில் பரவி வரும் காய்ச்சலை தடுக்க இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாமை தமிழ்நாடு அரசு நடத்துகிறது. சென்னையில் 200 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 800 இடங்களிலும் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது. 

நைஜீரியாவில் பஸ் மீது ரயில் மோதி 6 பேர் உயிரிழப்பு..!

நைஜீரியா லாகோஸ் பகுதியில் அரசு ஊழியர்களை ஏற்றிசென்ற பேருந்து மீது ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு. 

Background

சென்னையில் தொடர்ந்து 293வது நாள்களாக மாற்றமில்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் ஆசுவாசமடைந்துள்ளனர்.


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம். 


இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால்  பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.


தொடர்ந்து மாறாத எரிபொருள் விலை 









 


சென்னையில் இன்று (மார்ச்.09) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 292வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். 


இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  


இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.