Breaking News LIVE: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
கவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்கி மண்டல அதிகாரி பிறப்பித்த உத்தரவு ரத்து
ஒரு வாரத்தில் பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில அரசின் அதிகாரங்களுக்கும் எதிரான அணைப் பாதுகாப்பு மசோதாவை ஒன்றிய அரசு பிடிவாதமாக நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒன்றிய - மாநில அரசுகளுக்கு” இடையிலான உறவில் மிகப்பெரும் சறுக்கலாகவே அமைந்திருப்பது கண்டு வேதனைப்படுகிறேன். மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் செயல் மிகவும் சர்வாதிகாரமானது. ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. மாநிலங்களில் உள்ள மக்கள் நாடாளுமன்றத்தில் அளித்த பெரும்பான்மையைக் கொண்டு மாநிலங்களுக்கு எதிராகவே சட்டமியற்றி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
- முதல்வர் மு.க. ஸ்டாலின்
வரலாறு காணாத மழை பெய்த போதிலும் பாதிப்பு என்பது குறைவாகவே ஏற்பட்டுள்ளது
இன்னொரு முறை இத்தகைய மழை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியம்
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
இன்று முதல் மதுக்கடைகள், பார்கள் இனி வழக்கம்போல மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் - டாஸ்மாக் நிர்வாகம்
ஜூலை 5ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டுவந்த டாஸ்மாக் கடை நேரம் மாற்றம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதியை பின்பற்றவில்லை; ஒற்றை தலைமை வேண்டும் என்ற அதிமுக நிறுவனர், உறுப்பினர்கள் நோக்கத்திற்கு எதிராக விதிகளில் திருத்தம் - மனுதாரர்
1 முதல் 8ம் வகுப்பு வரை சூழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்
வகுப்புகளை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவே நடத்தி கொள்ளலாம்
இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்
ஓமைக்ரான் கொரோனா பரவல் - பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
Background
Breaking News Tamil LIVE Updates:
அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், அந்தமான் அருகே வங்கக்கடலில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், தமிழ்நாட்டை நோக்கி நகரும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு இல்லை எனவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -