Breaking News Live: ஆளுநர் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது - சிபிஎம்

Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 13 Apr 2022 04:48 PM
ஆளுநர் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது - சிபிஎம்

ஆளுநர் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது - சிபிஎம்

நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கில் இருந்து நீக்கக்கோரி வருமான வரித்துறை பதில் மனுத்தாக்கல்

நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் இருந்து தங்களை நீக்கக் கோரி வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஞானவேல்ராஜா, சிவகார்த்திகேயன் விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளது.

கிடுகிடுவென ஏறிய தங்கம் விலை

இன்று தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. கிராம் தங்கம் ரூபாய் 40 அதிகரித்து ரூபாய் 4987க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 320 அதிகரித்து ரூபாய் 39896க்கு விற்கப்படுகிறது.

சென்னை ஐஐடி பேராசிரியர்கள் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை ஐஐடி பேராசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

போயிங் விமானத்தை இயக்க 90 விமானிகளுக்கு தடை

போயிங் 737 MAX ரக விமானத்தை இயக்க 90 விமானிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 90 விமானிகளுக்கு தடை விதிக்கப்பட்டது பற்றி மத்திய விமான போக்குவரத்து இயக்குநர் அருண்குமார் தகவல்

சித்திரை திருவிழா - வைகை நீர் மதுரை வந்தடைந்தது

சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை மாநகரை வந்தடைந்தது

தினகரனிடம் 11 மணி நேரம் விசாரணை

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் தினகரனிடம் அமலாக்கத்துறை 11 மணி நேரம் விசாரணை செய்தது

7ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை


சென்னையில் 7ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனை

Background

சமபந்தி போஜனத்தை சமத்துவ விருந்து என பெயர் மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தலைமைசெயலகத்தில் ஆதி திராவிடர் - பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “சமூகநீதிப் பாதையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. வன்கொடுமை சம்பவங்களை தடுக்க எத்தனையோ முயற்சி எடுத்தாலும் ஆங்காங்கே சில பிரச்னைகள் நடக்கின்றன. வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார். 


தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சென்னை நந்தனத்தில் ரூ.40 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் புதிய மாணவர் விடுதி அமைக்கப்படும் என்றும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளில் ரூ.123 கோடியில் உட்கட்டமைப்பு வசதி செய்யப்படும் என்றும் கூறினார். மேலும், சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என பெயர் மாற்றம் செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமபந்தி போஜனத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் கோரிக்கை வைத்ததாகவும், அவரின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றப்படுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.


சுதந்திர தினம் உள்ளிட்ட பல முக்கிய நாட்களில் தமிழ்நாடு அரசு சார்பில் சமபந்தி போஜனம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.