Breaking News Live: பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொளியில் ஆலோசனை..!

Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 11 Apr 2022 01:35 PM
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகார தீர்ப்பு : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் - சசிகலா

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சசிகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக பேட்டி அளித்துள்ளார். 

ஆந்திராவில் அமைச்சராக நடிகை ரோஜா பதவியேற்றார்

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் புதிய அமைச்சராக நடிகை ரோஜா பதவியேற்றார். நகரி எம்எல்ஏவான ரோஜாவுக்கு ஆளுநர் விஸ்வபூஷன் ஹரிச்சந்திரன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னாள் சபாநாயகர் தனபால் உடல்நிலை குறித்து முதலமைச்சர் நலம் விசாரித்தார்

முன்னாள் சபாநாயகர் தனபால் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் தொலைபேசியில் விசாரித்தார்.

புதிய பள்ளி , விடுதி கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

புதிய பள்ளி கட்டடங்கள், மாணவ, மாணவிகளுக்கான விடுதி கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். செங்கல்பட்டு, நாகை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டன.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 861 ஆக குறைந்தது

இந்தியாவில் ஒரேநாளில் 861 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 929 பேர் குணமடைந்தனர்.

மாநில உரிமை, மொழி உரிமை காக்க பாடுபடுவோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

மாநில உரிமை, மொழி உரிமை காத்திட கண்ணும் கருத்துமாக தொடர்ந்து பாடுபடுவோம் என்று திமுக தொண்டர்களுக்கு கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சசிகலா விவகாரம் - ஓபிஎஸ், இபிஎஸ் மனு மீது இன்று தீர்ப்பு

அதிமுக விவகாரத்தில் சசிகலா மனுவை நிராகரிக்க கோரிய ஓபிஎஸ் - இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் மழை காரணமாக 1 முதல் 9ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நுழைவுத்தேர்வுக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானம்

மத்திய பல்கலைகழகத்தின் இளநிலை படிப்புகளில் நுழைவுத்தேர்வு நடத்துவதற்காக எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.

பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபருடன் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காணொலியில் ஆலோசனை நடத்துகிறார்.

5ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 5வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Background

பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொளியில் ஆலோசனை  நடத்தினர்.


இந்தியா அமெரிக்கா நல்லுறவு பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும் - பிரதமர் மோடி 


இந்தியா - அமெரிக்கா உறவு மேலும் வலுவடைய வேண்டும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்


 


தமிழ்நாட்டில் ஏப்ரல் 16 ம் தேதியான சனிக்கிழமையும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14 ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு, ஏப்ரல் 15 ம் தேதி புனித வெள்ளி என்பதால் சனிக்கிழமையான ஏப். 16 ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


சனிக்கிழமையான ஏப். 16 ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை முடிந்து ஏப்ரல் 18 ம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். 


 


 


பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் இளைய சகோதரர் ஆவார்.


 


 


சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, “ பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என தெரிவித்து இருக்கிறார். 


 


பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் அன்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.


இல்லம் தேடி கல்வித் திட்டத்தை இன்னும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டிய தேவை உள்ளது. 


150 கோடி மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும். 


2813 நடுநிலை பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். 


அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, படிக்க, எழுத, புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த, ரூ.30 கோடி மதிப்பீட்டில், 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.


 


இந்தியாவில் கடந்த 130 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் நீடித்து வந்தது. இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவுகள் வெளியான நிலையில் சென்னையில் கடந்த 16 நாட்களில் 14ஆவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. 


இந்த நிலையில், சென்னையில் 5ஆவது நாளாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.