Breaking Tamil LIVE: கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜெயக்குமார் மரண வழக்கில் நெல்லை போலீசார் ரூபி மனோகரன் மற்றும் கே.வி.தங்கபாலுவிற்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் தரக் கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு. ரூ. 37, 907 கோடி வெள்ள நிவாரணம் கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு.
கன்னியாகுமரி அருகே கணபதிபுரம் கடலில் குளித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய ஒரு மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு மீனவர்கள் அனுப்பி வைத்தனர்.
செந்தில்பாலாஜி ஜாமீன் மனு தொடர்பான வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து விசாரணை மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை கோரிக்கையை செந்தில்பாலாஜி தரப்பு எதிர்த்த நிலையில் அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்! இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!” என தெரிவித்துள்ளார்.
பாண்டியன் விரைவு ரயிலில் இருந்து சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாரியப்பன் என்ற இளைஞர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். நண்பர்களுடன் புதுச்சேரி சென்று விட்டு ஊர் திரும்பியபோது இந்த விபத்தானது நடந்துள்ளது. மாரியப்பனின் செல்போன் சிக்னல் மூலம் அவர் விழுந்த இடத்தை போலீசார் கண்டறிந்து மீட்டனர்.
இந்தோனேசியாவில் உள்ள சீரம் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 6.2 ஆக பதிவாகியுள்ளது.
Background
- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தமிழ்நாட்டில் சுமார் 7.80 லட்சம் மாணவ, மாணவியர்கள் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் பள்ளிகள்,நூலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
- ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் இடையே போட்டி நடைபெறுகிறது. முன்னதாக மும்பை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், ஹைதராபாத் அணிக்கு இப்போட்டியில் கட்டாயம் ஜெயிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த ஆட்டங்களில் சென்னை அணி பஞ்சாபையும், கொல்கத்தா அணி லக்னோவையும் வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.
- சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோமெண்ட் வழியாக தினசரி இருமுறை மெமோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் திருவண்ணாமலை செல்ல ரூ.50 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கள்ளக்கடல் நிகழ்வு காரணமாக கடந்த 2 தினங்களாக தென் தமிழகத்தின் கடலோர பகுதிகள் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடற்பரப்பிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இப்படியான நிலையில் இன்று மாலை வரை அலைகளின் சீற்றம் இருக்கும் என கடல்சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -