Breaking News LIVE: சென்னையில் இன்று 105 டிகிரி வெப்பம் பதிவு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

ABP NADU Last Updated: 27 May 2024 06:46 PM
சென்னையில் இன்று 105 டிகிரி வெப்பம் பதிவு

கோடை காலம் முடிவடையும் தருவாயிலும் சென்னையில் இன்று 105 டிகிரி வெப்பம் பதிவாகியது.

400 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெறும் - அண்ணாமலை

தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

வாகன தணிக்கை! ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 1.10 கோடி ரூபாய் அபராதம் வசூல்

தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் ஒரே நாளில் ரூபாய் 1.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்

நெல்லை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல்மணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார்.

Flamingos Pondicherry : புதுச்சேரி, ஊசுட்டேரியில் குவிந்த ஆஸ்திரேலிய ப்ளெமிங்கோ பறவைகள்..

புதுச்சேரி அடுத்த ஊசுட்டேரியில் இனப்பெருக்கத்திற்காக ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய பிளமிங்கோ பறவைகள் குவித்துள்ளன

சென்னை: லேப்டாப் சார்ஜ்போட முயன்றபோது மின்சாரம் தாக்கி பெண் மருத்துவர் உயிரிழப்பு

சென்னை: லேப்டாப் சார்ஜ்போட முயன்றபோது மின்சாரம் தாக்கி பெண் மருத்துவர் சரணிதா உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

சாமி கும்பிடுபவர்கள் எல்லாம் மதவெறியர்களா? திருநாவுக்கரசு எம்.பி..,

”எனக்குத் தெரிந்தவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு ஆன்மிகவாதி; சாமி கும்பிடுபவர்கள் எல்லாம் மதவெறியர்களா?” -அண்ணாமலையின் கருத்துக்கு திருநாவுக்கரசு எம்.பி. பதில்

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு: 2000 பேர் புதைந்துள்ளதாக ஐ.நா தகவல்..

கேரளாவில் தென்மேற்கு பருவமழை

கேரளாவில், அடுத்த 5 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவிவருகிறது

Breaking News LIVE: சேலம் : தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் வாந்தி மயக்கம்

சேலம் ஆச்சான்குட்டப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு சொநர்சிங் கல்லூரியில் நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 


இந்த நிலையில் தற்போது மேல்சிகிச்சைக்காக நர்சிங் மாணவிகள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Breaking News LIVE: கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்..!

தேதி முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். கேரள எல்லையை முற்றுகையிட ஊர்வலமாக வந்த விவசாய சங்கத்தினர் பென்னிகுயிக் மண்டபம் அருகே தடுத்து நிறுத்தம். 

Breaking News LIVE: சி.வி.சண்முகம் வழக்கு ஜூன் 24க்கு ஒத்திவைப்பு..!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு விசாரணையை ஜூன் 24க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. 

Breaking News LIVE: தமிழ்நாட்டில் கோடை மழை 25% கூடுதலாக பெய்துள்ளது..!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 25 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் காலை வரை கோடை மழை 117. 3 மிமீ பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 146.9 மிமீ மழை பெய்துள்ளது. 

திற்பரப்பு அருவி : ஆர்ப்பரித்துக் கொட்டிய அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை மற்றும் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம். ஆர்ப்பரித்துக் கொட்டிய தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

மத ரீதியான இட ஒதுக்கீட்டைக் கொடுப்பது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது - யோகி ஆதித்யநாத்

Gold Rate : தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது

Gold Rate : தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.53,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது

Breaking News LIVE: தமிழ்நாட்டில் 108 டிகிரி வெயில் சுட்டெரிக்கும் - பிரதீப் ஜான் கணிப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் 108 டிகிரி பார்ன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இதையடுத்து, கடந்த வாரத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் இந்த வாரம் வெயில் சுட்டெரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: ஜூன் 1ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை..!

இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். 


இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர். 

Arvind Kejriwal : தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்ற மனு செய்த கெஜ்ரிவால்

Breaking News LIVE: ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்.. கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 8 பேர் மீது வழக்குப்பதிவு..!

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 டிக்கெட்டுகளை ரூ. 1.42 லட்சத்துக்கு கள்ளச்சந்தையில் விற்றவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 

Breaking News LIVE: திருப்பதி அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு...!

திருப்பதி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். நெல்லூர் இந்துகூர்பேட்டையை சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு காணிப்பாக்கம்  சென்றபோது விபத்துக்குள்ளானது. 


 

Background


  • திருப்பதி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். நெல்லூர் இந்துகூர்பேட்டையை சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு காணிப்பாக்கம்  சென்றபோது விபத்துக்குள்ளானது. 


  • தீவிர புயலாக வலுவடைந்த ‘ரெமால் புயல்’ வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் அருகே கரையை கடந்தது. 


    கடந்த 6 மணிநேரத்தில் 13 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து மோங்லா என்னும் பகுதியில் ‘ரெமால்’ புயல் கரையை கடந்தது. வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, புயல் கரையை கடந்தபோது, காற்றானது மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்று. வீசியது. இந்த புயலானது மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கும் வங்கதேசத்தின் கெயுபாடாவுக்கும் இடையே உள்ள கடற்கரையில் கடந்தது. தற்போது ரெமால் புயலானது வலுவிழந்துள்ளது. புயல் பாதிப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என தெரிவித்துள்ளனர்



  • 17வது சீசன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது மூன்றாவது கோப்பையை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதையடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணி விளையாடிய இரண்டு இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. 

  • ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 டிக்கெட்டுகளை ரூ. 1.42 லட்சத்துக்கு கள்ளச்சந்தையில் விற்றவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.