Breaking News LIVE: முல்லைபெரியாறு விவகாரம்! கேரளாவை எதிர்த்து மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
காவல்துறை - போக்குவரத்து தொழிலாளர்கள் மோதல் நல்லதல்ல. தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் ( AITUC ) தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசின் முன்மொழிவை மத்திய அரசு பரிசீலிக்கக் கூடாது எனவும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய வனத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது இந்திய அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: நீதிபதி சுவாமிநாதன்
குண்டர் சட்டம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு: நீதிபதி பாலாஜி
நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு. மூன்றாவது நீதிபதி விசாரணை செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை, சேலம், தர்மபுரி, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியல் பேருந்து திட்டம், காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், மாநில மகளிர் கொள்கை, சத்துணவுத் திட்ட மகளிர் மேம்பாட்டில் முதல்வர், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டபணிகள் துறை என பல்வேறு திட்டங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிட்யில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இப்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் நலனில் தனிக் கவனம் செலுத்தி பல திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால் மகளிர், குழந்தைகள், மாற்றுத்திறனானிகள் என அனைவரும் பாதுகாப்புடன் வாழ்கின்றனர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை மனமாரப் பாராட்டுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் பெய்த கனமழை காரணமாக தோவாளை - தாழக்குடி அருகே போடப்பட்டிருந்த தற்காலிக பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, கடலூர், பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வீட்டு காவலாளியை தாக்கிய வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சேலத்தில் பணமதிப்பிழப்பின் போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட 500,1000 ரூபாய் நோட்டுகளை பதித்து வைத்திருந்த சபீர் என்பவரை அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத நோட்டுகள் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 650 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 96 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
வங்கக் கடலில் நீடித்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமானது. வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
மேற்குவங்க பாஜக பொதுச்செயலாளர் சிரியா பர்வீன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். சந்தோஷ்காளியில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்தவர்களால் பெண்களுக்கு பாலியல் அத்துமீறல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு, பாஜக திட்டமிட்டு நடத்திய நாடகம் என்பது தெரியவந்ததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
சென்னை ஏ.ஆர். புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து பட்டினப்பாக்கம் போலீசார் , வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் அந்த பள்ளியில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆகஸ்ட் மாதத்துக்கான 300 ரூபாய், சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் இன்று , காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. டிக்கெட் வேண்டிய பக்தர்கள் தேவஸ்தான இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in/home/dashboard என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து செய்து கொள்ளலாம்.
குற்றாலத்தில் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்டதாலும், தொடர் மழை காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை திருப்பூர், கோவை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Background
தென் மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து , புயலாக வலுப்பெற்று, 25.05.2024 காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது, வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று, வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இந்த புயலுக்கு ரெமல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழை பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வரும் 31 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, கேரளாவில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் கேரள அரசு ஈடுபட்டு வருவதால், அதனை உடனே கைவிடவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காவிரிப் படுகையில் அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -