Breaking Tamil LIVE : வேலூர் - குடியாத்தத்தில் வெளுத்து வாங்கும் ஆலங்கட்டி மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
கடந்த 25 நாட்களாக தினமும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகிவந்த நிலையில், வேலூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றான குடியாத்தத்தில் ஆலங்கட்டி மழை பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஏற்காட்டில் மிதமான மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் 111 பாரன்ஹீட்டில் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோயிலில் பராமரிப்பு பணிகளை தொல்லியல் துறையே மேற்கொள்கிறது என்று இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே என்னும் ரிமோட் கண்ட்ரோல் சாதனத்துக்கு, சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்தான் பேட்டரிகள். பேட்டரிகளை எடுத்துவிட்டால் அவரால் ஒரு வார்த்தை கூட பேசமுடியாது - பாஜக
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மீது பொய்களை கூறி வருகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் என்ன உத்தரவாதம் அளித்துள்ளோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்வர். 1947ல் சுதந்திரம் அடைந்தது முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடஒதுக்கீட்டை எதிர்த்தது பாஜக, ஆர்.எஸ்.எஸ்.தான் என தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் சாகிறது. பாகிஸ்தான் அழுகிறது... ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்று பாகிஸ்தான் வேண்டிக்கொள்கிறது - குஜராத்தில் பிரதமர் மோடி பரப்புரை
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா ஜாமீன் கோரிய மனு மீது 6ம் தேதி உத்தரவு. சிபிஐ கைது செய்ததை எதிர்த்து கவிதா தொடர்ந்த வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மே 6ல் உத்தரவு.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பான வழக்கில் நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேர் ஆஜர். சென்னையில் இரண்டு பேரும் ஆஜராகுமாறு நேற்று போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் https.//exams.nta.ac.in/NEET என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீலகிரி உள்பட 19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம். தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது
பப்புவா நியூ கினியாவில் நேற்றிறவு 11.45 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. வாகனங்களில் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் அருகே லாரி மோதியதில் இருச்சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த பெண் காவலர் உயிரிழந்தார். கல்லுப்பாளையம் அருகே நடந்த விபத்தில் அமுதா என்ற பெண் காவலர் உயிரிழந்தார்.
தேர்தல் பரப்புரைகளில் போலி வீடியோக்கள் இடம்பெறுவதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. பொது நல வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்
வாகனங்களில் இருக்கும் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அந்த வகையில் அங்கிகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினார் அபராதம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Background
இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர் வெப்ப அலை மற்றும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக வட உள் தமிழக மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 கோடி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போட்து தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என தெரிய வந்தது. இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவருக்கு தாம்பரம் போலீசார் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி சம்மன் அனுப்பப்பட்டது. இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று ஆஜராகப் போவதாக ஏற்கனவே நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார். இன்று ஆஜராவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், 3 வது கட்டம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரது மனைவி இன்று குஜராத்தில் ரோடு ஷோ பிர்ரச்சாரம் மேற்கொள்கிறார். இது ஒரு பக்கம் இருக்க அமேதி மற்றும் ரேபரலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இங்கே உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -