Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 16 May 2024 09:13 PM
ஆந்திரா வன்முறை - மேலும் இரண்டு எஸ்.பி-க்கள் சஸ்பண்ட்!

ஆந்திராவில் 13ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது, தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலால் திருப்பதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  திருப்பதி, சந்திரகிரி, தாடிபத்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்குப் பிறகும் மோதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது இரண்டு எஸ்.பிக்களை சஸ்பண்ட் செய்துள்ளது. 

ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்

தேனி காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். 

தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

ஒரு மனிதன் சகமனிதனிடம் தீண்டாமையை கடைபிடிப்பதை நீதிமன்றம் எப்போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. இது ஏற்புடையது அல்ல எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 

பீகாரில் பசுவதை செய்தால் தலைகீழாக கட்டித் தொங்கவிடுவோம் - பிரச்சாரத்தில் அமித் ஷா சர்ச்சை பேச்சு!

பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரத்தில் பேசியபோது, சீதா பிறந்த பூமியான பீகாரில் பசுவதை செய்தால் அவர்களை தலைகீழாக கட்டித் தொங்கவிடுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 

Breaking News LIVE: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்


தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும், மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும், மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

20ம் தேதி 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

மே 20ம் தேதி 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருச்செங்கோட்டில் தனியார் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை

திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் மகளிர் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் வழக்கு ஒத்தி வைப்பு

திருச்சி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த சவுக்கு சங்கரின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக அரசு காவிரியில் 6.2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு கோரிக்கை

மே மாதத்தில் காவிரியில் 6.2 டி.எம்.சி. தண்ணீர்  திறந்து விட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி, அரியானாவில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி, அரியானாவில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார்.

Breaking News LIVE: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ.54,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ. 6,795க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ. 92.50க்கு விற்பனையாகிறது. 

நெல்லையில் மழைநீரில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் சஸ்பெண்ட்

நெல்லையில் மழைநீரில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை அதிகாரிகள் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பட்டுக்கோட்டையில் ஒரே நாளில் 16 செ.மீட்டர் மழை பதிவு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்

சென்னை, புளியந்தோப்பில் கே.பி.பார்க் என்ற குடியிருப்பு பகுதியில் 6 வயது சிறுவனை நாய் கடித்துக் குதறியது. காயமடைந்த சிறுவன் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Breaking News LIVE: காலை 10 மணிக்குள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதிராமபட்டிணத்தில் ஒரே நாளில் 10.3 செ.மீட்டர் மழை

தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், தஞ்சை அதிராமபட்டிணத்தில் ஒரே நாளில் 10.3 செ.மீட்டர் மழை பெய்தது.

Breaking News LIVE: உதகை தொட்டபெட்டாவுக்கு 7 நாட்கள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

உதகையில் உள்ள தொட்டபெட்டா காட்சி முனை செல்ல இன்று முதல் 7 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஃபாஸ்ட் டேக் சோதனை சாவடியை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. 

Background



  • சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இந்த கோடை மழையானது ஆறுதல் அளித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருக்குமாறு 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் அனுப்பியுள்ளது. மே 18 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 




  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி பஞ்சாப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த பஞ்சாப் அணி சாம் கரன் அதிரடியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே இன்று நடக்கும் ஆட்டத்தில் குஜராத், ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது.



  • மதுராந்தகம் அருகே லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.நேற்று அதிகாலை அதேபகுதியில் நடைபெற்ற விபத்தில் 4 பேர் பலியான நிலையில் மீண்டும் விபத்தில் 4 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.