Breaking News LIVE: இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும் - கார்கே
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Breaking News LIVE: இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும் என இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தியானத்தை முடித்து, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிரதமர் மோடி தற்போது ஹெலிபேட் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, திருவள்ளுவர் சிலைக்கு நேரில் சென்று பார்வையிடுகிறார்.
7 ஆம் கட்டமான இறுதிகட்ட தேர்தல வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபற்று வருகிறது. தற்போது மதியம் 1 மணி நிலவரப்படி 40.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் நேற்று அதிகபட்சமாக 119 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதிகப்படியான வெப்பநிலை காரணமாக 25 தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக அவசர நிலையை பிரகடனம் செய்ய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அமைச்சரும், நீலகிரி பா.ஜ.க வேட்பாளருமான எல்.முருகன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2014ல், 10வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம், 10 ஆண்டுகளில் முன்னேறி, தற்போது 5வது இடத்திற்கு வந்துள்ளது. பாஜக தமிழகத்தில் இரட்டை இலக்கங்களில் வெற்றி பெறும்" என்றார்.
மக்களவை தேர்தல் 2024ன் கடைசிக்கட்ட தேர்தலில் 9 மணி நிலவரப்படி 11.31% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 7ம் கட்ட மக்களவை தேர்தலில் ஜெபி நட்டா, யோகி ஆதித்யநாத், கங்கனா ரனாவத், ஹர்பஜன்சிங் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றன. வடபழனி- கோடம்பாக்கத்துக்கு கிடையே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடும் வெப்ப அலையினை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை ஜீன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு முதல்போக நெல் சாகுபடிக்காக இன்று முதல் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல் 120 நாட்களுக்கு விவசாய தேவைக்கு வினாடிக்கு 200 கன அடியும், குடி நீருக்காக 100 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு.
ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் பிலாஸ்பூர் தொகுதியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வாக்குப்பதிவு செய்தார்.
பின் பேசிய அவர், ” இங்கு நான்தான் முதல் வாக்காளர். திறமையான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவுக்காக அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவை திறமையான, தன்னிறைவு பெற்ற மற்றும் வளர்ந்த இந்தியாவாக மாற்றுவதற்கு வாக்காளர்கள் வாக்களித்து பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்... இதை ஜனநாயகத்தின் திருவிழாவாக நான் கருதுகிறேன்..." என தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தந்து வாக்கினை செலுத்திய பின் பிரதமர் மோடியை பற்றி நெகிழ்ந்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ பிரதமர் மோடி தனது 2.5 மாத பிஸி ஷெட்யூலில் இருந்து சிறிது நேரம் ஒதுக்கியுள்ளார், இருப்பினும் தனது முழு வாழ்க்கையையும் இந்தியாவுக்காக அர்ப்பணித்துள்ளார். 10 ஆண்டுகள் இந்தியாவுக்கு சேவை செய்து, நாட்டின் நலனையே முதன்மையாகக் கருதி உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர். பிரதமர் மோடியின் இந்த ஆன்மிக வழிபாடு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களால் இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது. இதைப் புரிந்து கொள்ள, ஒருவர் இந்தியா மற்றும் இந்தியாவின் நித்திய விழுமியங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும், மேலும் பிரதமர் மோடியின் தியானமும் பக்தியும் தேச வழிபாட்டின் ஒரு பகுதியாகும், அதன் பலன் நாடும் பெறும் என்று நாம் நம்பிக்கையுடன் கூறலாம்” என தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஹர்பஜன் சிங் ஜலந்தரில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Background
மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜூன் 1) அதாவது இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. உ.பி-பஞ்சாப்பில் அதிகபட்சமாக தலா 13 இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உட்பட 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டிடுகிறார்.
பீகாரைச் சேர்ந்த 8 தொகுதிகள், சண்டிகரைச் சேர்ந்த ஒரு தொகுதி, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 4 தொகுதிகள், ஜார்கண்டைச் சேர்ந்த 3 தொகுதிகள், ஒடிஷாவைச் சேர்ந்த 6 தொகுதிகள், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 9 தொகுதிகள், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலா 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 3வது நாளாக கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு வந்தடைந்தார். பின் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொண்டார். மாலை 5 மணியளவில் குமரியில் இருக்கும் பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். நேற்று அதிகாலை 5.30 மணி வரை சுமார் 11 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்ட பின், தியான மண்டபத்தில் இருந்து வெளியே வந்து சூரிய உதயத்தை கண்டு வழிபாடு செய்தார்.
பின் மாலை 6 மணியளவில் தியானம் தொடங்கினார். 3வது நாளாக இன்று தியானம் மேற்கொள்கிறார். சுமார் 45 மணி நேரம் தியானத்திற்கு பின் இன்று பிற்பகல் 3 மணிக்கு தியானத்தை முடிக்கிறார். இது போன்ற சூழலில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -