இந்தியாவின் மிகப்பெரிய துறையாக இருப்பது ரயில்வே ஆகும். ரயில்வே துறையில் நவீனப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில்களை ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தி வருகிறது. நடப்பாண்டில் மட்டும் 32 வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

நடப்பாண்டில் அறிமுகமான வந்தே பாரத் ரயில்கள்:

1. புதுதில்லி - வாரணாசி வந்தே பாரத் ரயில்2. நாக்பூர் - செகந்திரபாத் வந்தே பாரத் ரயில்3. சென்னை எழும்பூர் - நாகர்கோயில் வந்தே பாரத் 4. மதுரை - பெங்களூர் வந்தேபாரத்5. மீரட் - லக்னோ வந்தேபாரத்6. டாடாநகர் - பாட்னா வந்தேபாரத் 7. கயா - கவுரா வந்தேபாரத்8.ரோர்கேலா - கவுரா வந்தே பாரத்9. ஆக்ரா - வாரணாசி வந்தே பாரத்10. புனே - ஹப்ளி வந்தே பாரத்11.கோல்ஹாபூர் - புனே வந்தேபாரத்12. துர்க்- விசாகப்பட்டினம் வந்தே பாரத்13. பகல்பூர் - கவுரா வந்தே பாரத்14. த்யோகர் - வாரணாசி வந்தே பாரத்15. டாடாநகர் - பிரம்மபூர் வந்தே பாரத்16. ஜம்மு தவி - ஸ்ரீநகர் வந்தே பாரத் 17. சண்டிகர் - அமிர்தசரஸ் வந்தே பாரத்18. ஜெய்ப்பூர் - உதய்ப்பூர் வந்தே பாரத்19. அகமதாபாத் - ராஜ்கோட் வந்தேபாரத்20. மும்பை - கோவா வந்தே பாரத்21. மும்பை - ஷீரடி வந்தே பாரத்22. ஹைதரபாத் - திருப்பதி வந்தேபாரத்23. போபால் - இந்தூர் வந்தே பாரத் 24. போபால் - ஜபல்பூர் வந்தே பாரத்25. ராய்ப்பூர் - புவனேஸ்வர் வந்தே பாரத்26. கோவை - கொச்சி வந்தே பாரத் 27. கவுகாத்தி - இம்பால் வந்தே பாரத்28. கவுகாத்தி - அகர்தலா வந்தே பாரத்29. கொல்கத்தா - சிலிகுரி வந்தே பாரத்30.லக்னோ - கோரக்பூர் வந்தே பாரத்31.பாட்னா - தர்பங்கா வந்தே பாரத் 32. சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் தமிழகத்திற்கு எத்தனை?

இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் சென்னை எழும்பூர் - நாகர்கோயில், மதுரை - பெங்களூர், கோவை - கொச்சி மற்றும் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இந்தாண்டு முதல் இயக்கப்படுகிறது.   வந்தே பாரத் ரயில்கள் நவீன வசதி கொண்டதாக இருந்தாலும் அதன் கட்டணமானது, சாதாரண ரயில்களை காட்டிலும் பன்மடங்கு அதிகளவு உள்ளது. இதனால், பயணிகள் பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் வந்தே பாரத் ரயிலானது பல நிறுத்தங்களில் நிற்பதில்லை. வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.