தமிழ்நாட்டில் இன்று மாலைவரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும், குறிப்பாக 8 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 


ரெட் அலர்ட் மாவட்டங்கள்:


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மற்றும் விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணிவரைக்குள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், காற்றின் வேகம் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. 






மேலும், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.