Breaking News LIVE: தமிழ்நாட்டிற்கு ரூபாய் 5 ஆயிரத்து 797 கோடி வரி பகிர்வு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
தமிழ்நாட்டுக்கு வரி பகிர்வாக ரூபாய் 5,797 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2028ல் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகளின் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
கீழடியில் கிடைத்த அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கையில், “ பிரதமர் பாணியில் பா.ஜ.க.வே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களைத் தலைவர் கலைஞர் அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயகக் களத்தில் நின்று ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படும் உரிமை பா.ஜ.க.வுக்கு உண்டு. கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பா.ஜ.க., வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கையில், “பா.ஜ.க. அரசின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு மக்களிடம் பரப்புங்கள். மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்களுக்கு நினைவூட்டும் கடமைதான் நமக்கு உண்டு. புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நாற்பதும் நமதே என்று சொல்லத்தக்க வகையில் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் 'இந்தியா' கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகத் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் 'இந்தியா' கூட்டணிக் கட்சிக் கட்சிகளை பா.ஜ.க. தொல்லை செய்து வருவதைப் பார்க்கும்போது நம்முடைய அணியின் வெற்றி அகில இந்தியா முழுமைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது” என தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் அணி சார்பில் கூட்டம் நடைபெற்றது. அதில், கூட்டணி குறித்து முடிவெடுக்க ஓபிஎஸ்க்கு அதிகாரம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் அணியின் அரசியல் ஆலோசகரும், அதிமுக முன்னாள் மூத்த தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும். மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்பதே எங்களது அரசியல் நிலைப்பாடு. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து நேரம் வரும்போது கூட்டணியை அறிவிப்போம். பாஜக மாநிலத் தலைவர் மற்றும் டெல்லி தலைவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இதுதான் உண்மை” எனத்தெரிவித்தார்.
மக்களவை தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே உடன்பாடி ஏற்பட்டுள்ளது என்றும், எத்தனை தொகுதி என்பதை காட்டிலும் நாட்டின் நலனே முக்கியம் என்றும் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் கட்சியில் இணைந்தார் அசோகன். பாஜக கூட்டணியில் த.மா.கா இணைந்ததால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப்பிரதேசத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலியாகினர் - 21 பேர் காயமடைந்த நிலையில் மாநில அரசு நிதியுதவி அறிவித்துள்ளது. அதன்படி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் சங்கம் 2வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊழல் செய்த பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை பணி இடைநீக்கம் செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான குழுவில் தலைமை செயலர், தொழில் துறை செயலர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
Background
Petrol Diesel Price Today, February 29: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 650வது நாளை நெருங்கி விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 29ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 649வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -