Breaking News LIVE: மார்ச் 2,3, 4 தேதிகளில் தி.மு.க. பொதுக்கூட்டம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 28 Feb 2024 01:01 PM
மார்ச் 2,3, 4 தேதிகளில் தி.மு.க. பொதுக்கூட்டம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 2,3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாநகரம் மற்றும் நகரங்களில் தி.மு.க. பொதுக்கூட்டங்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 16 மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் போட்டி

கேரளாவில் 16 மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் 15 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

இமாச்சல பிரதேசத்தில் 15 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

தொப்பூர் கணவாயில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

தொப்பூர் கணவாயில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளாகியது.

Breaking News LIVE: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி..!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், இந்த வழக்கை மூன்று வாரங்களுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு - இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க. - வி.சி.க. இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கோவையில் மூதாட்டியை கட்டிப்போட்டு 25 சவரன் நகை கொள்ளை

கோவையில் மூதாட்டியை கட்டிப்போட்டு 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Background

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். 


இலங்கையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்ல இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்தார். இலங்கை செல்ல சாந்தனுக்கு அந்நாட்டு அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சாந்தன் உட்பட 7 பேர் 2022ல் விடுதலை செய்யப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார். 


உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற கடந்த ஜனவரி 27ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில்ம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 7.50க்கு உயிர் பிரிந்ததாக ராஜீவ் காந்தி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.