Breaking News LIVE: அண்ணா, கருணாநிதி புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் இன்னும் சற்று நேரத்தில் திறப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
பேடி எம் நிறுவன தலைவர் பதவியில் இருந்து விஜய் சர்மா விலகியுள்ளார்.
அண்ணா, கருணாநிதி நினைவிட திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்றுள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் திறக்கப்பட உள்ளது.
அண்ணா, கருணாநிதி நினைவிடம் திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.
கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்களை நம்ப வேண்டாம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
விளவங்கோடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய கூட்டணி வலுப்பெற்றுள்ளது என்று தி.க. தலைவர் கி. வீரமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, ஏற்கனவே பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸின் மாநில ஊடக மற்றும் தகவல் தொடர்புத்துறை தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட வழக்கை நிராகரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க பழனிசாமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி: வைகை அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சராக இருப்பவர்கள் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். தவறு செய்தவர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் - அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான முறைகேடு வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
முறைகேடு புகார் வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. முன்னதாக வீட்டுவசதி வாரிய வீட்டை ஒருவருக்கு முறைகேடாக ஒதுக்கிய வழக்கில் அவரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக உடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. பாஜகவின் மூத்த தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். 2026ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு, ஒரு வாரத்தில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கப்படும் - சரத்குமார்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார். திருப்பூரில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தின் தானும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுப்பதற்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.மாவட்ட வருவாய் அலுவலர் பசுமைவெளி விமான நிலைய திட்டம் மண்டல 3 அலுவலகம், காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரி கரையில் திறக்கப்பட்டுள்ளது
சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். அதில், “கலைஞர் நினைவிடம் கண்டு சிலிர்த்தேன் கலைஞரின் கையைப் பிடித்துக்கொண்டே கலைஞர் நினைவிடம் சுற்றிவந்த உணர்வு இது தந்தைக்குத் தனயன் எழுப்பிய மண்டபமல்ல தலைவனுக்குத் தொண்டன் கட்டிய தாஜ்மஹால் "இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம்" கலைஞர் கண்டிருந்தால் கவிதை பாடியிருப்பார் உருவமாய் ஒலியாய் புதைத்த இடத்தில் கலைஞர் உயிரோடிருக்கிறார் உலகத் தரம்” என பதிவிட்டுள்ளார்.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்கவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற இன்னும் 152 ரன்கள் தேவைப்படுகிறது. 192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை சேர்த்துள்ளது.
நாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் அக்கரைப்பேட்டை - கீச்சாங்குப்பம் மீனவர்கள் இடையே நடந்த மோதலில் 2 மீனவர்கள் உயிரிழப்பு - பைபர் படகில் மீன்பிடி வலை சிக்கி சேதமானதால் மோதல் நடந்த நிலையில் 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 நாட்களுக்கு பிறகு இன்று மீன்பிடிக்க ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர் - இலங்கை மற்றும் மத்திய அரசை கண்டித்து கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துகின்றனர் - மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டு கடந்த சில நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Background
கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 26ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 646வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -