Breaking Tamil LIVE:ஜூன் 9ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
ஜூன் 9ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விவிபேட் வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாயிலில் உள்ள இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக அதிகாரிகள் கோயில் திருவிழாவில் மைக்செட்டை ஆப் செய்து கோயில் விழாவிற்கு இடையூறு அளித்து கோயில் அர்ச்சகரை மிரட்டல் விடுத்ததை கண்டித்து ஸ்ரீ சம்பந்தர் உழவாரப்பணி மன்றம், பாஜக, இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
நைட்ரஜன் ஐஸ் உணவு பொருளுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
நைட்ரஜன் ஐஸ் உணவு பொருள் அல்ல எனவும், அதை உட்கொண்டால் மிக ஆபத்தான நிலைக்கு எடுத்துண்செல்லும். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்த உணவு பொருட்களையும் வழங்க கூடாது. உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் எலந்த உணவு பொருட்களை விற்பனை செய்ய கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி விற்பனை செய்யும் உணவு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அய்யாக்கண்ணு தலைமையில் 2வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தீ விவசாயிகள் போராட்டம்.
கடும் வெயில் காரணமாக தமிழ்நாட்டுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம் - பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை இழுத்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் அதே பகுதியை சேர்ந்த வெற்றி (21), கிருஷ்ணகுமார் (21), சதீஷ் (29), விஜயராஜ் (22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,730க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.53,840க்கு விற்பனையாகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். கூவாகம் மற்றும் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு சென்று வந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் உள்ள அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு - வீசப்பட்ட குண்டு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தில் பட்டு வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டியில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கவுள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது. வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக இறுதிக்கட்ட வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூரில் இருந்து திருவண்ணாமலை சென்ற அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழப்பு - 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். தண்டாங்கோரை அருகே இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது.
Background
- தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியல் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுமக்கள் முடிந்தவரை அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான வாக்குப்பதிவுக்கு மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பது அருகிலுள்ள விவி பேட் இயந்திரம் மூலம் பார்க்க முடியும். இதனிடையே இந்த விவி பேட் பதிவாகும் வாக்குகளை, மின்னணு இயந்திரத்துடன் சரி பார்க்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
- ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது. நடப்பு சீசனில் சென்னை அணி அதன் சொந்த மைதானத்தில் பெற்ற முதல் தோல்வியாகும். அதேசமயம் நடப்பு தொடரில் லக்னோ அணி 2வது முறையாக சென்னையை வீழ்த்தியது. இதனிடையே இன்றைய ஆட்டத்தில் டெல்லி - குஜராத் அணிகள் மோதுகின்றது.
- தமிழ்நாட்டில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முறை கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதியே தேர்வுகள் முடிவதாக இருந்தது. ஆனால் தெலுங்கு வருடப்பிறப்பு, ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, மக்களவை தேர்தல் என அடுத்தடுத்து நிகழ்வுகள் வந்ததால் தேர்வுகள் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் பள்ளி திறப்பு ஜூன் முதல் வாரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.Breaking Tamil LIVE:
- - - - - - - - - Advertisement - - - - - - - - -