Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, June 5: நாடு முழுவதும் இன்று நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை, உடனுக்குடன் அறிய ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் தொடர்ந்து இணைந்திருங்கள்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ்வாதி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மீது மர்மகும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், காயமடைந்த அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனின் எம்.பி.யாக பதவியேற்ற தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி அருகே நாகராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டுக்கும் வெயில் சுட்டெரித்தது.
கேரள பருவமழை காரணமாக அந்த மாநிலத்தில் என்.டி.ஆர்.எஃப். வீரர்கள் தயாராக இருந்து வருகிறார்கள்.
பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவியேற்றார் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கியர் ஸ்டாமர்.
மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து வரும் 10ம் தேதி எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வரும் செப்டம்பர் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் மைவி3 ஏட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தன் சரண் அடைந்தார்.
நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழலியுறுத்தியுள்ளது.
தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, பிரிட்டன் பிரதமர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்தார்.
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்கள் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக்கில் பங்கு பெற உள்ள இந்திய வீரர்கள் நன்றாக தூங்க வேண்டும் எனவும் நன்றாக தூங்கினால்தான் வீரர், வீராங்கனைகளுக்கு நல்ல முடிவு கிட்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. அண்ணாமலை வேண்டுமென்றே அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு பேசியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் 6 ஆயிரம் வாக்குகள் தான் குறைவாக பெற்றது. இது சட்டமன்ற தேர்தல் அல்ல. அதிமுகவை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்தது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். பொய் செய்திகளை வெளியிடுகிறார். வாயில் வடை சுடுகிறார்” எனத் தெரிவித்தார்.
டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியினருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
உத்தரப்பிரதேசம், ஹத்ராஸ்: ஜூலை 2ம் தேதி ஹத்ராஸில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகினர். மக்களவை காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேசுகிறார்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் ஆதரவாளர் வீடுகளில் காலை 08.00 மணி முதல் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டிலும், வேலாயுதம்பாளையம் உள்ள செல்வராஜ் என்பவர் வீட்டிலும் சிபிசிஐ போலீசார் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு சம்பந்தமாக சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை திருவான்மியூரில் அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. நண்பர்கள் இருவர் பைக்கில் சென்றபோது ஒருவரின் வலது கை துண்டானது. தனியார் மருத்துவமனைக்கு எதிரே இந்த விபத்து நடந்துள்ளது.
உடனே தனியார் மருத்துவமனை அந்த இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளது. உடன் வந்த நண்பர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.
திருப்பதி, ஆந்திர பிரதேசம்: திருப்பதி பாலாஜி கோயிலுக்கு டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் நேரில் சென்று பிரார்த்தனை செய்தார்.
சிதம்பரத்தில் கடந்த ஜூன் மாதம் பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களின் போலிச் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டது,
இது சம்பந்தமாக சங்கர் தீட்சிதர், நாகப்பன் ஆகிய இருவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு சி பி சி ஐ டி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபி சி ஐ டி போலீசார் சிதம்பரத்தில் போலி சான்றிதழ்கள் கிடந்த இடம், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் வீடு ஆகியவற்றை பார்வையிட்டு விசாரணையை துவக்கி உள்ளனர்
ஹத்ராஸில் கூட்டநெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி இன்று ஹத்ராஸ் சென்றார். அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் நாடாளுமன்ற பொதுதேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் தொழிலாளர் கட்சி 64 இடங்களில் முன்னிலை வகிக்க, ஆளும் பழமைவாத கட்சி 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கடந்த 14 ஆண்டுகளாக இந்த பழமைவாத கட்சி அங்கு ஆட்சிய்ல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் பகுதியில் நடைபெற்ற மதசொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், சாதனைகளால் தமிழ்கத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் திமுகவை ஆதரியுங்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களியுங்கள் என வீடியோவில் பேசியுள்ளார்.
Background
- டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் மும்பை வெற்றி ஊர்வலம் - அலைகடலென லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாக முழக்கம்
- ஐபிஎல் தொடரின் போது ரசிகர்களால் எதிர்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா - உலக கோப்பை வெற்றியால் வான்கடேவில் பாசமழையில் நனைந்த வீடியோ
- இந்திய கிரிக்கெட் வீரர்களை வரவேற்க வந்த ரசிகர்களில் 10 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
- உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் 121 பேர் உயிரிழந்த சோக சம்பவம் - நேரில் சென்று இன்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி
- சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகி கொலை வழக்கு - திமுக பிரமுகர் உட்பட 9 பேரை கைது செய்து போலீசார் அதிரடி
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில்8, 9, 10, 13-ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்படும் - மாவட்ட ஆட்சியர்
- கோவையில் பானிபூரி விற்பனையகங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை - தரையில் குவிக்கப்பட்டு இருந்த 10 ஆயிரம் பானிபூரிகள் அழிப்பு
- ஜார்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார் - வரும் 8ம் தேதி மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு’
- பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு - 14 ஆண்டுகால பழமைவாத கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும் கருத்து கணிப்புகள் திட்டவட்டம்
- அமெரிகக் அதிபர் தேர்தலில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என பைடன் தரப்பு திட்டவட்டம் - டிரம்பை வீழ்த்த உதவுங்கள் என நாட்டு மக்களுக்கு கோரிக்கை
- இந்தியா உடனான முதலீட்டுத் திட்டங்களை நிறுத்தி வைத்த எலான் மஸ்க்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -