புதிய பிரதமர்:


பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், பிரிட்டனின் அடுத்த பிரதமராக அவர் பதவியேற்றார். பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு லேபர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்ததது.


முதல் தமிழ் எம்.பி:


பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிட்டிருந்தனர். அவர்களுள் ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போ நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட உமா குமரன் வெற்றி பெற்றார். அவர் போட்டியிட்ட தொகுதியில் 19 ஆயிரத்து 415 வாக்குகள் பெற்று உமா குமரன் வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முதல் தமிழர் என்ற சாதனையை படைத்துள்ளார் உமா குமரன்.


வாழ்த்திய முதலமைச்சர்:


இந்நிலையில் முதல் தமிழராக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நுழையும் உமா குமரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.






இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை 5) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினரான முதல் தமிழ் பெண்மணியுமான உமா குமாரனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்தவர்”என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?


மேலும் படிக்க: ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி