Breaking News LIVE: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆன சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 23 Feb 2024 09:11 PM
Breaking News LIVE: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆன சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆன சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இன்னும் 10 தினங்களில் இலங்கை அனுப்பி வைக்கப்படுவார் எனவும் அதிகாரிகள் தகவல். 

தேர்தல் பரப்புரை தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான 2 வழக்குகள் ரத்து

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பரப்புரை மற்றும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை; புதுச்சேரி, காரைக்கால் மாணவர்கள் கவனத்திற்கு

மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல் படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மதுரை பேருந்து நிலைய வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து; தீயை அணைக்கும் பணி தீவிரம்

மதுரை பேருந்து நிலையத்திற்கு அருகில் கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் திறக்கப்படாத வணிக வளாக கட்டித்தத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். 

Breaking News LIVE: தமிழ்நாடு அரசின் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம்

தமிழ்நாடு அரசின் பயங்கரவாத தடுப்பு பிரிவு டிஐஜியாக மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே உளவுத்துறை டிஐஜியாக உள்ள அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: பிறந்தநாள் பொதுக்கூட்டம் வேண்டாம் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பிறந்தநாளை பெரிதாக கொண்டாட அமைச்சர் துரைமுருகன் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் தன்னுடைய பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். 

Breaking News LIVE: இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்.. பிப்ரவரி 26 முதல் திமுகவினர் பரப்புரை

பிப்ரவரி 26 முதல் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் திமுகவினர் வீடு, வீடாக சென்று பரப்புரை செய்வதை தொடங்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றம் ஏன்? - முதலமைச்சர் விளக்கம்

நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டது ஏன் என முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். நிதித்துறை போன்று ஐடி துறையிலும் மாற்றங்களை கொண்டு வர மாற்றப்பட்டதாக கவல் தொழில்நுட்பத்துறை உச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார். 

இந்திய அணி பந்துவீச்சு..!

ராஞ்சியில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டு, ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் சர்வதேச போட்டிகளில் இன்று அறிமுகமாகிறார்.

Breaking News LIVE: சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Breaking News LIVE: சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Breaking News LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. 

Background

கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 23ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 643வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.