Breaking News LIVE: ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - திருமாவளவன்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அவசர வழக்காக எடுத்து நாளை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவுக்கு மேலும் 3 நாட்கள் அமலாக்கத்துறை காவல். மேலும், 5 நாட்கள் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும். வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் - வானிலை ஆய்வு மையம்
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
பழனி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் பரபரப்பு. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து 50க்கு மேற்பட்ட போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.
ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சேலம் தொகுதி வேட்பாளர், நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷ் உள்ளிடோரும் ஆலோசனையில் பங்கேற்பு.
மாஸ்கோ தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.
மக்களவவைத் தேர்தல் தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாஹூ ஆலோசனை நடத்தினார்.
சேலையூர் எஸ்.ஐ. வங்கதேசத்தை ஊடுருவ முயன்றதாக கூறி அந்த நாட்டு ராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான மஹூவா மொய்த்ரா இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு சவரனுக்கு ரூபாய் 120 குறைந்துள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஓட்டுநர் முருகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள வடக்குபுதூரில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி போலீசார் தாக்கியதில் முருகன் உயிரிழந்தார்.
இந்தியாவின் அனுபவம் வாய்ந்த டேபிள் டென்னிஸ் வீரரும், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான ஷரத் கமல், இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் கொடியை ஏந்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் 17 நாட்கள் நடைபெறவுள்ளது.
மக்களவை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.
நீண்டகாலமாக பொதுவெளியில் தோன்றாத பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் பாதிப்புக்குதான் ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், திருவாரூரில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி திருச்சியில் இருந்து நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. திருச்சியில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி.
விமானப் பணி நேர வரம்புகளை மீறிய புகாரின் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தணிக்கையின்போது கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரியும், படகுகளை மீட்கக் கோரியும் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
ஐபிஎல் 2024ல் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் பஞ்சாப் - டெல்லியும், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளும் மோத இருக்கின்றன.
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் தனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். மத்திய சென்னை வேட்பாளரான தயாநிதி மாறனை ஆதரித்து இன்று காலை உதயநிதி பரப்புரை மேற்கொள்கிறார்.
Background
திருச்சியில் நேற்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி மற்றும் தனது கட்சி வேட்பாளர்களுக்காக மக்களவை தேர்தல் பரப்புரையை தொடங்கினார். திருச்சியில் போட்டியிடும் துரை வைகோ, பெரம்பலூரில் போட்டியிடும் அருண் நேரு ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அப்பாவும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்காக திருச்சி மாநகரத்தை நோக்கி நகர், மறுபுறம் அவரது மகனும், விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பரப்புரையில் இறங்குகிறார். இதையடுத்து, முதற்கட்டமாக உதயநிதி ஸ்டாலின் மத்திய சென்னை வேட்பாளரான தயாநிதி மாறனை ஆதரித்து இன்று காலை பரப்புரை தொடங்குகிறார்.
கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் மிக முக்கிய கட்சியாக திமுக களமிறங்க, கட்சியின் சின்னம் என்னவென்றே தெரியாமல் பரப்புரையை தொடங்கிய நாம் தமிழர் கட்சிக்கு நேற்று இந்திய தேர்தல் ஆணையம் ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கியது. இதன் தொடர்ச்சியாக இன்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையை அடுத்த துரைபாக்கத்தில் தங்களது 40 மக்களவை தேர்தல் வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைக்கிறார்.
எவ்வளவு நேரம் மக்களவை தேர்தலையும் மக்களவையும் பத்தி மட்டும் பேசுறது, அப்படியே வாங்க கொஞ்சம் விளையாட்டா விளையாட்டு பக்கம் போவோம். ஐபிஎல் 2024ல் இன்றைய முதல் போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மகாராஜா யாதவிந்தர் சிங் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு மோத இருக்கின்றன. இதுக்கு அப்புறம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நைட் 7.30 மணிக்கு நேருக்குநேர் மோதுகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -