Breaking News LIVE: பெங்களூரு குண்டு வெடிப்புக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
பெங்களூரு குண்டு வெடிப்புக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும், எதிர்கட்சிகள் இதில் அரசியல் செய்யவேண்டாம் எனவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்திப்பு அருகே ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் சேவை பாதிப்பு சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவை தேர்தல் தொடர்பாக கூட்டணி அமைக்க விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்ற அதிமுக நிர்வாகிகள் பிரேமலதாவிடம் பேச்சுவார்த்தை
கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பிரேமலதாவுடன் சந்திப்பு
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் கூடாது என அனைத்து தலைமை பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், மாதாந்திர பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்யப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி செயல்பட்டு வருகிறது பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக பள்ளி அலுவலக இமெயிலுக்கு குறுந்தகவல் வந்துள்ளது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எல்காட் நிறுவன மேலாண் இயக்குனராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நெல்லை மாநகராட்சியின் 7வது வார்டு திமுக உறுப்பினர் இந்திராணி ஆணையரிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.
பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மக்களவை தேர்தலில் பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக விண்ணப்பிக்கும் மனுவை பரிசீலனை செய்து உரிய உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானாவில் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டங்களில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டுமானால் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு கனிமொழி கருணாநிதியின் வீட்டிற்கு சென்று கலைஞரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் இன்று (01/03/2024) சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி இல்லத்தில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பிரபுவுக்கு சொந்தமான 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., பிரபு மற்றும் அவரது தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னால் பண்ருட்டி எம்.எல்.ஏ., சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்பமனு வாங்கவும், பெற்ற விண்ணப்பங்களை வழங்கவும் இன்று கடைசி நாளாகும். கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கிய விருப்பமனு பெறும் நிகழ்வில் இதுவரை 1000 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Background
கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 650வது நாளை நெருங்கி விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (மார்ச் 1ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 649வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -