Breaking News LIVE: விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் முதல் திருக்கறுங்குடி முருகன் கோயிலுக்கு 27ம் தேதி வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓசூர் தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை காண பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
ஏற்காட்டில் மலைப்பாதையில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 231 பந்துகளை எதிர்கொண்டு தனது இரண்டாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார் ஜெய்ஷ்வால்.
ராஜ்கோட் டெஸ்ட் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான சர்ப்ஃராஸ் கான், இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்துள்ளார். முதல் இன்னிங்ஸில் இவர் 62 ரன்கள் சேர்த்தார்.
ராஜ்கோட்டில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வலுவாக விளையாடி வருகிறது. ஜெய்ஸ்வால் 200 ரன்களையும், சர்ப்ஃப்ராஸ் கான் 50 ரன்களையும் நெருங்கியுள்ளனர். இந்திய அணி 520 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை பனையூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த 20 தினங்களில் கேரள மாநிலம் வயநாட்டில் வனவிலங்குகளின் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு ஆறுதல் சொல்ல வயநாடு எம்.பி ராகுல் காந்தி நேரில் சென்றுள்ளார்.
தமிழ் நாட்டில் நிறம் ஏற்றப்பட்ட பஞ்சு மிட்டாய்களை விற்க தடை விதிக்கப்பட்ட நிலையில், வெள்ளை நிற பஞ்சு மிட்டாய்கள் கும்பகோணம் பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
சென்னையில் இன்று மட்டும் 44 புறநகர் ரயில்கள் தண்டவாள பராமரிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.
தமிழக வெற்றி கழகம் என அறிவிக்கப்பட்ட தனது கட்சிப் பெயர் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என திருத்தி அறிவித்துள்ளார்.
10 பேர் உயிரிழந்த விருதுநகர் பட்டாசு ஆலை தீவிபத்து தொடர்பாக ஃபோர்மேனை கைது செய்தனர் காவல்துறையினர்.
Background
vijay TVK: நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரை, தமிழக வெற்றிக் கழகம் என திருத்தம் செய்துள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி 4ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியான போது, தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியின் பெயரை விஜய் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், தமிழ் இலக்கணப்படி, நிலைமொழியாக வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான “க்” வர வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் சுட்டிக் காட்டினர். சில அரசியல் கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரில், வெற்றி கழகத்திற்கு இடையே ஒற்றெழுத்தான “க்” சேர்த்து ”தமிழக வெற்றிக் கழகம்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
கட்சியின் பெயரில் இருந்த பிழையை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியதை ஏற்று, விஜய் அதில் திருத்தம் செய்துள்ளார். இதன் மூலம், ஒரு அரசியல்வாதிக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் விமர்சனங்களை ஏற்கும் பண்பை விஜய் நிரூபித்துள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். கட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அற்விப்புகள் வெளியாகி இருந்தாலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பணிகளை மேற்கொள்ளுமாறு நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் ஏமாற்றம்:
விஜயின் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒருபக்கம் அவரை அரசியல் தலைவராக பார்க்கும ஆசை இருந்தாலும் இனிமேல் அவரை நடிகராக திரையில் பார்க்க முடியாத வருத்தம் இருக்கதான் செய்கிறது. தங்களது சிறு வயது முதல் பார்த்து வளர்ந்த ஒரு நடிகரை இனிமேல் மீண்டும் திரையில் பார்க்க முடியாதது அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில் விஜயின் 69 ஆவது படமே அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில் இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதே ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது.
சினிமாவில் 40 ஆண்டுகள்
நடிகர் விஜயகாந்தின் குழந்தை பருவத்து கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. வெற்றி திரைப்படத்துடன் சேர்த்து நடிகர் விஜய்யும் அவரின் திரை பயணத்தை தொடங்கி 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 1992ம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் மூலம் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகபடுத்தினார் எஸ்.ஏ. சந்திரசேகர். அதன் தொடர்ச்சியாக செந்தூரபாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என அடுத்தடுத்து கமர்சியல் படங்களாக நடித்து இளைய தளபதி என்ற அடைமொழியுடன் கொண்டாடப்பட்டார். ரொமாண்டிக் நடிகராக இருந்து வந்த விஜய் அடுத்தடுத்தப் படங்களின் மூலம் ஆக்ஷன் ஹிரோவாக மக்கள் மனதில் பதிந்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -