Breaking News LIVE: மூன்றாவது டெஸ்ட்டில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால்; 300 ரன்களுக்கு மேல் இந்தியா முன்னிலை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 17 Feb 2024 04:29 PM
அரைசதம் விளாசிய கில்

சிறப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடி வரும் கில் 98 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். 

மூன்றாவது டெஸ்ட்டில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால்; 300 ரன்களுக்கு மேல் இந்தியா முன்னிலை

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சதம் விளாசியுள்ளார். இவர் 122 பந்துகளில் சதம் விளாசினார். 

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்தால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பள்ளிவாசல், தர்காக்களுக்கு மானியத் தொகை உயர்வு

பள்ளிவாசல், தர்காக்களுக்கு மானியம் உயர்த்தப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

17 வயது சிறுவனை கொலை செய்த சிறுவன் போலீசில் சரண்

கோவை ஒண்டிப்புதூரில் 17 வயது சிறுவனை காதல் விவகாரத்தில் கொலை செய்த மற்றொரு 17 வயது சிறுவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் முதல் மினி டைட்டில் பூங்கா திறப்பு

தமிழ்நாட்டின் முதல் மினி டைட்டில் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை - தமிழ்நாடு அரசு அதிரடி

தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தேனாம்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அருகே மாற்றுத்திறனாளிகள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் 3 மணி நேரம் தாமதம்

சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

மயிலாப்பூர் கழிவு நீர் உந்துநிலையம் செயல்படாது

மயிலாப்பூர் கழிவு நீர் உந்துநிலையம் இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை நண்பகல் 12 மணி வரை செயல்படாது.

”நவால்னி மரணத்திற்கு புதினே காரணம்” - பைடன்

அமெரிக்க அதிபர் பைடன் வெள்ளை மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், “என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் நல்வானியின் மரணம் புடினும் அவரது குண்டர்களும் செய்த ஏதோவொன்றின் விளைவு என்பதில் சந்தேகமில்லை. ரஷ்ய அதிகாரிகள் தங்கள் சொந்த கதையைச் சொல்லப் போகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

Background

GSLV-F14: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் GSLV-F14 விண்கலம் மூலம், இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.


இன்று விண்ணில் பாய்கிறது GSLV-F14 ராக்கெட்: 


வானிலை மற்றும் பேரிடர்  எச்சரிக்கை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெறும் நோக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்காக  GSLV-F14 விண்கலம் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள, இந்த விண்கலத்திற்கான 27.5 மணி நேர கவுண்டவுன் நேற்று பிற்பகல் 02.05 மணிக்கு தொடங்கியது.


பூமி அறிவியல் அமைச்சகம் இந்த திட்டத்திற்கான மொத்த செலவையும் ஏற்றுள்ளது. INSAT-3DS புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான நேரலையை மாலை 5 மணி முதலே, இஸ்ரோ யூடியூப் பக்கத்தில் பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம். 






ராக்கெட் வடிவமைப்பு:


420 டன் எடைகொண்ட ஜி.எஸ்.எல்.வி. எப்-14 விண்கலம் 51.7 மீட்டர் உயரத்துடன் 3 நிலைகளை கொண்டுள்ளது. முதல் நிலையில் 139-டன் உந்துசக்தியைக் கொண்ட திட உந்துசக்தி மோட்டார் இடம்பெற்றுள்ளது. 2-வது நிலையில் 40 டன் உந்து சக்தியுடன் கூடிய எந்திரம், 3-வது நிலையில் 15 டன் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் நிலையாகும். 


இன்சாட்-3 டி.எஸ். என்றால் என்ன?


INSAT-3DS என்பது வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கைகளை வழங்கும் மேம்பட்ட செயற்கைக்கோள் ஆகும். இது தற்போதைய சுற்றுப்பாதையில் உள்ள இன்சாட்-3டி மற்றும் இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள்கள் வழங்கும் சேவைகளைத் தொடர அனுமதிக்கிறது.  INSAT-3DS ஒரு புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இஸ்ரோவின் கூற்றுப்படி,  INSAT-3DS ஆனது INSAT அமைப்பின் திறன்களை மேம்படுத்தவும் உதவும். இந்த செயற்கைக்கோளின் மொத்த நிறையானது 2,275 கிலோகிராம் ஆகும். இதற்கு செயல் வடிவம் வழங்குவதில் இந்தியத் தொழில்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.


இன்சாட்-3 டிஎஸ்-ல் உள்ள கருவிகள் என்ன?


INSAT-3DS ஆனது மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகளை மேற்கொள்ளவும், வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்காக நிலம் மற்றும் கடல் பரப்பை கண்காணிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளில் பல அதிநவீன பேலோடுகள் பொருத்தப்பட்டுள்ளன, அதில் ஆறு சேனல் இமேஜர், 19 சேனல் சவுண்டர் மற்றும் இரண்டு தகவல் தொடர்பு பேலோடுகள் அடங்கும். டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர் (டிஆர்டி) கருவி மற்றும் செயற்கைக்கோள் உதவி தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஎஸ்&ஆர்) டிரான்ஸ்பாண்டர் ஆகியவை இரண்டு தொடர்பு பேலோடுகள் ஆகும். 


தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து வானிலை, நீரியல் மற்றும் கடல்சார் தரவுகளைப் பெறுவது மற்றும் வானிலை முன்னறிவிப்பு திறன்களை மேம்படுத்துவது டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டரின் நோக்கமாகும். செயற்கைக்கோளின் உள்ளே இணைக்கப்பட்டுள்ள SAS&R டிரான்ஸ்பாண்டர், பீக்கான் டிரான்ஸ்மிட்டர்களில் இருந்து டிஸ்ட்ரஸ் சிக்னல் அல்லது எச்சரிக்கை கண்டறிதல் மற்றும் தேடல் மற்றும் மீட்பு சேவைகளை எளிதாக்கும்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.