Breaking Tamil LIVE:உதயநிதி ஸ்டாலின் சென்ற ஹெலிகாப்டரில் சோதனை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
மக்களவைத் தேர்தலுக்காக உதயநிதி ஸ்டாலின் சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்ததால், மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஓவைசி ஆதரவு
Ambedkar Jayanthi :
பரந்துபட்ட இந்திய சமுதாயம் விடுதலை பெற்ற கையோடு மதத்தாலும் சாதிச் சழக்காலும் மூச்சுமுட்டிக் கிடந்தபோது தெளிவிக்க வந்த தென்றல்; மனிதருள் சமத்துவம் பேணும் பேச்சைத் தொடங்கிய அண்ணல்; அதை அரசியல் சாசனம் என்று ஆதாரமாகச் செய்தும் வைத்த பெருமகன் பாபா சாகேப் அம்பேத்கர். மறுபடி சாதிப் பேச்சுகள் தொடங்கியிருக்கும் இந்நேரத்தில் அவரது தேவை முன்னெப்போதையும்விட கூடுதலாக உள்ளது. அவர்தம் பிறந்த நாளான இன்று அவருடைய சிந்தனையை மறுபடி கையிலெடுப்போம். அண்ணல் பாதையை அனைவருக்குமான பாதையாக ஆக்கிக்கொள்வோம்.
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்?
1.’ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை’ அமல்படுத்தப்படும்.
2. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு.
3.அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்.
4. பொது வாக்காளர் பட்டியல் முறை அமல்படுத்தப்படும்
5. 2025-ஆம் ஆண்டு ’பழங்குடியினரின் பெருமை ஆண்டாக’ கடைபிடிக்கப்படும்
BJP Election Manifesto: நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி.
டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பாஜக தேர்தல் அறிக்கையை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு தயாரித்துள்ளது.
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் பேருந்து யாத்திரை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று பேருந்து யாத்திரையின்போது ஜெகன்மோகன் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதில் ஜெகன்மோசனுக்கு 3 தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனையின்படி இன்று தனது யாத்திரையை ஜெகன்மோகன் ரெட்டி ரத்து செய்துள்ளார்.
பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வெளியிட்டார் ஜே.பி.நட்டா
மக்களவை தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி திருநெல்வேலி வருகை - அம்பாசமுத்திரம் பகுதியில் பொதுக்கூட்டம் நடக்கும் நிலையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Background
- மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது. இன்னும் 5 நாட்களில் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு தேர்தல் அறிக்கை வெளியாகிறது. பாஜகவின் வாக்குறுதிகள் இம்முறை என்னவாக இருக்கும் என ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஏற்கனவே பாஜக தலைவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பு நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது.
ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் அங்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றது. இப்படியான நிலையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பரப்புரையில் ஈடுபட்ட போது கூட்டத்தில் இருந்து அவர் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஜெகன் மோகன் நெற்றியில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா - லக்னோ அணிகள் மோதுகின்றது. இதேபோல் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதுகின்றது. இந்த ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இரு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்துள்ளது.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மேலும் மோடி அரசு ஒரு சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறது. சாதாரண மக்களுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -