Breaking Tamil LIVE: டெஸ்லா கார் உற்பத்தியை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர முயற்சிப்போம்- அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 12 Apr 2024 06:26 PM
விலை உயர்ந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி பரப்புரை

மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி பரப்புரை 

டெஸ்லா கார் உற்பத்தியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முயற்சிப்போம்- அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா


தமிழ்நாட்டுக்கு நிதி தராத மோடி: பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தி

தமிழ்நாட்டுக்கு நிதி தராத மோடி. வெள்ளத்தின்போதும் கூட கருதுகோள் இல்லாமல் நிதி தர மறுக்கும் பிரதமராக மோடி இருக்கிறார்: பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தி


 

Breaking Tamil LIVE: சமச்சீரற்ற இந்தியாவாக தற்போதைய இந்தியா உள்ளது.. நெல்லையில் ராகுல் காந்தி

Rahul Gandhi in Nellai LIVE:  ப்ரிட்டிஷ் காலத்தை விடவும் சமச்சீரற்ற இந்தியாவாக தற்போதைய இந்தியா உள்ளது.. நாட்டில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. மாறாக பணக்காரர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இரு தத்துவங்களுக்கு இடையே நடைபெறும் போராட்டம் இது. இந்த தேர்தல் முக்கியமானது.. நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு

Breaking Tamil LIVE: தேர்தல் பரப்புரை மேற்கொள்ள நெல்லை வந்தடைந்தார் ராகுல் காந்தி

Rahul Gandhi In Thirunelveli : பொதுக்கூட்டம் நடக்கும் நெல்லை ஜான்ஸ் பள்ளி மைதானத்தை வந்தடைந்தார் ராகுல் காந்தி. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்துகொண்டிருந்த ராகுல் காந்தி காரில் இருந்து இறங்கி மக்களிடம் உரையாடினார். 

தேர்தல் பரப்புரைக்காக நெல்லை சென்றார் ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி மதுரை வந்த நிலையில், ஹெலிகாப்டர் மூலமாக திருநெல்வேலி சென்றடைந்தார். 

கோவையில் 4 நவயோதயா பள்ளிகள் அமைப்போம்: கோயம்புத்தூருக்கு பாஜக கொடுத்த 100 வாக்குறுதிகள்

கோவைக்கான பாஜக தேர்தல் அறிக்கை


6 சட்டமன்ற தொகுதிகளிலும் எம்.பி. அலுவலகம் திறக்கப்படும் 


கோவையில் மெட்ரோ‌ திட்டம் விமான நிலைய விரிவாக்கம் செயல்படுத்தப்படும்.


ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்படுத்துவோம்.


நொய்யல், கெளசிகா நதி புனரமைப்பு செய்யப்படும்.


போதை தடுப்பு மையத்தை கோவையில் நிறுவுவோம் 


கோவையில் 4 நவயோதயா பள்ளிகள் அமைப்போம்.


250 மக்கள் மருந்தகங்கள் உருவாக்குவோம்.


கோவையில் இருந்து ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.


கொங்கு மண்டலத்தில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்போம்.


கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு கோவைக்கு வழங்கிய நிதியை சிறப்பு தணிக்கை செய்வோம் 


அதில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.


6 தொகுதிக்கும் தனித்தனி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளோம்


5 ஆண்டுகள் முடியும் போது சர்வதேச வரைபடத்தில் கோவை இருக்கும்.


போர்க்கால அடிப்படையில் வாக்குறுதிகளை செயல்படுவோம்

100 BJP Promises to Coimbatore : கோவையில் இருந்து ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.

கோவைக்கான பாஜக தேர்தல் அறிக்கை


6 சட்டமன்ற தொகுதிகளிலும் எம்.பி. அலுவலகம் திறக்கப்படும் 


கோவையில் மெட்ரோ‌ திட்டம் விமான நிலைய விரிவாக்கம் செயல்படுத்தப்படும்.


ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்படுத்துவோம்.


நொய்யல், கெளசிகா நதி புனரமைப்பு செய்யப்படும்.


போதை தடுப்பு மையத்தை கோவையில் நிறுவுவோம் 


கோவையில் 4 நவயோதயா பள்ளிகள் அமைப்போம்.


250 மக்கள் மருந்தகங்கள் உருவாக்குவோம்.


கோவையில் இருந்து ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.


கொங்கு மண்டலத்தில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்போம்.


கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு கோவைக்கு வழங்கிய நிதியை சிறப்பு தணிக்கை செய்வோம் 


அதில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.


6 தொகுதிக்கும் தனித்தனி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளோம்


5 ஆண்டுகள் முடியும் போது சர்வதேச வரைபடத்தில் கோவை இருக்கும்.


போர்க்கால அடிப்படையில் வாக்குறுதிகளை செயல்படுவோம்

கோவையில் என்.ஐ.ஏ.. என்.சி.பி.. கிளை அமைக்கப்படும்.. கோவைக்கான 100 வாக்குறுதிகளை வெளியிட்ட அண்ணாமலை

கோவையில் என்.ஐ.ஏ.. என்.சி.பி.. கிளை அமைக்கப்படும்.. கோயம்புத்தூர் தொகுதியில் ஐஐஎம் அமைக்கப்படும். கோவைக்கான 100 வாக்குறுதிகளை வெளியிட்ட அண்ணாமலை

பெண் யானையைக் காப்பாற்றிய வனத்துறை..

Breaking Tamil LIVE: கோவை - அண்ணாமலை மீது வழக்குபதிவு

நேற்று இரவு ஆவாரம்பாளையத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குபதிவு.

Breaking Tamil LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், திருச்சி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking Tamil LIVE: சிறுத்தை அச்சம்.. அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!

மயிலாடுதுறையில் சுற்றி வந்த  சிறுத்தை அரியலூருக்கு சென்றதாக வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். சிறுத்தை நடமாட்டாம் காரணமாக அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 22 இடங்களில் கேமிரா அமைத்து தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

எங்கள் வேட்பாளர்களிடம் 1 ரூபாய் கூட இல்லை - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

எங்கள் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் செலவு செய்ய ரூபாய் 1 கூட பணம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

Breaking Tamil LIVE: தேர்தல் நடத்தை விதிமீறல் - அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

கோயம்புத்தூர் மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் நேற்று இரவு  தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

Breaking Tamil LIVE: கொட்டும் கோடை மழை.. குன்னூரில் 12 செ.மீ மழை பதிவு..!

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

Breaking Tamil LIVE: மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து அரியலூருக்கு சென்ற சிறுத்தை..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றி திறிந்த சிறுத்தை அரியலூர் மாவட்டத்திற்கு சென்றது. இந்த தகவலை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

Breaking Tamil LIVE: தேர்தல் ஆணையம் மீது முன்னாள் அதிகாரிகள் புகார்..!

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் 87 பேர் சேர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டு தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது என்றும், தேர்தல் ஆணையம் தனது வேலையை மறந்து இருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking Tamil LIVE: ராகுல்காந்தி வருகை - பாதுகாப்பு அதிகரிப்பு..!

மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல்காந்தி வருகையை ஒட்டி இன்று நெல்லை மற்றும் கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு கம்புகள் வைக்கப்பட்டுள்ளன. 

Breaking Tamil LIVE: வரலாறு காணாத உச்சம்.. ரூ.54,000 கடந்து தங்கம் விற்பனை..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து  ரூ. 54,440-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.80 அதிகரித்து ரூ.6,805  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.58,200 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,275 ஆகவும் விற்பனையாகிறது.

Breaking Tamil LIVE: செந்துறையில் சிறுத்தை நடமாட்டம் - போலீஸ் எச்சரிக்கை..!

செந்துறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். 

Breaking Tamil LIVE: கோவையில் திமுகவினரை தாக்கிய பாஜகவினர் மீது வழக்குப்பதிவு..!

கோவையில் திமுகவினரை தாக்கிய பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாஜகவினர் மாசாணி, ஆனந்தன், லட்சுமி செந்தில், ரங்கநாதன் ஆகியோர் மீது 3 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Breaking Tamil LIVE: டெல்டா, தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

வருகின்ற ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ட்ரோன் பறக்க தடை

ராகுல்காந்தி இன்று நெல்லை வர இருப்பதால் அங்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இன்று திருநெல்வேலி  வரும் ராகுல் காந்தி மாலை 3.50க்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை,நீதிமன்றம் எதிராக பெல் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 4 மணி முதல் 5 மணி வரை ராகுல் காந்தி  கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.


ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு தென்காசி சங்கரன்கோவில் வழியாக வரும் வாகனங்கள் சாந்தி நகர் வழியாக திம்மராஜபுரம் செல்லும் குமரி திருச்செந்தூர், தூத்துக்குடி வழியாக வரும் வாகனங்கள் ஹமாஸ் லைட் வழியாக திம்மராஜபுரம் செல்லும் பாளையத்து சங்கர் நகர் வழியாக வரும் வாகனங்கள் நீதிமன்றம் வழியாக திம்மராஜபுரம் செல்ல வேண்டும்.


ராகுல்காந்தி பொதுக்கூட்டத்திற்கு தண்ணீர் வாட்டர் பாட்டில் மற்றும் பைகள் எடுத்து வரக்கூடாது எனவும்  காவல்துறை அறிவுறுத்தி உள்ளது

Breaking Tamil LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கோடை மழை - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்..!

தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு நல்ல மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

Breaking Tamil LIVE: வெப்பத்தை தணிக்கும் கோடை மழை.. காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாயப்பு..!

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கடலூர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking Tamil LIVE: நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை

நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. வெயில் தாக்கம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Breaking Tamil LIVE: அடையாறு கூவம் நதியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

சென்னை ஜாஃபர்கான்பேட்டை அருகே உள்ள அடையாறு கூவம் நதியில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழந்தார். மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் நீச்சல் தெரியாமல் உயிரிழந்தான்.

Breaking Tamil LIVE: மக்களவை 3ஆம் கட்ட தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

மக்களவை  3 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 3 ஆம் கட்ட தேர்தல் மே 7 ஆம் தேதி நடக்கவுள்ளது. 

Background


  • மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார். திருநெல்வேலிக்கு வருகை தரும்  இன்று மதியம் 3 மணியளவில் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து கோவை செல்லும் ராகுல் காந்தி, அங்கு நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்கிறார். பின்னர் இரவில் ராகுல்காந்தி டெல்லி செல்லும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் திருப்பூரில் தங்குகிறார். இதனை முன்னிட்டு இரு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிள்ளது. 

  • தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழ்நாட்டில் வாக்கு சேகரிக்கிறார். 2 நாட்கள் பயணமாக இன்று மதியம் மதுரை வரும் அவர், சிவகங்கை சென்று அங்கு கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு விட்டு, நாளை காலை 9.50 மணிக்கு கன்னியாகுமரி தொகுதியில்  பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

  • மதுரை மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழாவுக்கான நிகழ்ச்சிகள் கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. காலை 9.55 மணி முதல் 10.19 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. 21 ஆம் தேதி திருக்கல்யாணம் நடக்கும் நிலையில் மார்ச் 22 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 23 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் சித்திரை திருவிழா முடிவடைகிறது

  • ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. லக்னோவில் இந்த ஆட்டமானது நடக்கிறது. முன்னதாக நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி பெற்றது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.