Breaking Tamil LIVE: திருவள்ளுவருக்கு விபூதி குங்குமம் வைத்த திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சாத்தனூர் பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவருக்கு மாலையிட சென்ற பிஜேபி வேட்பாளர் அஸ்வத்தாமன் திருவள்ளுவரின் நெற்றியில் திருநீறு இல்லாததால் விபூதி மற்றும் குங்குமம் எடுத்து வரச் சொல்லி விபூதி குங்குமம் திருவள்ளுவருக்கு வைத்து பின்பு மாலை அணிவித்து வழிபாடு செய்தார்.
Geetanjali 2 : கீதாஞ்சலி 2 திரைப்படக் குழு, திருமலை திருப்பதியில் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
கனா தர்ஷன் - இக்லூ நடிகை அஞ்சு குரியன் திருமணம் உண்மையா? ஷுட்டிங் ஸ்டில்லா? புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது
Breaking Tamil LIVE: எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
நரி தாவி தாவி பழத்தை எடுக்க முயற்சி செய்யும். எடுக்க முடியவில்லையென்றால் பழம் புளிக்கும் என்று சொல்லும். அதைப்போலவே எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோவை விமர்சிக்கிறார். முடிந்தால் அவர் ரோடு ஷோ செய்யப்பட்டும். காலம் மாறிவிட்டது. பழைய மாவையே அரைத்துக்கொண்டிருக்க முடியாது.
PM Modi Meets Top Indian Gamers : இந்தியாவின் டாப் கேமர்களைச் சந்தித்த பிரதமர் மோடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மகளும் சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா சிபிஐ அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் அவரை ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து கஸ்டடியில் வைத்திருந்தனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
பழனியில் பாலியல் புகாரில் சிக்கிய பாஜக மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் கைது செய்யப்பட்டார்.காலை உணவு திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தருமபுரி நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் சார்பில் தருமபுரி-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ஈத்கா ஏரிக்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தொடர்ந்து முஸ்லிம்கள் ஏழைகளுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அதனையடுத்து தொழுகைக்காக சென்றவர்களிடம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் நகர செயலாளர் பூக்கடை ரவி உள்ளிட்டோர் அதிமுக வெற்றி வேட்பாளர் அசோகனுக்கு இரட்டை இலையில் வாக்களிக்கும் படி வாக்கு சேகரித்தார். அப்போது இஸ்லாமியர்களின் வழக்கம் போல் கட்டி தழுவி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்கிறதா? கார்ப்ரேசன்களில் உள்ள ஊழல் குறித்து செய்தி ஊடகம் பேச முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
”தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளிக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு முதன்முதலில் வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அதன் பின் இரு முறை நீட்டிக்கப்பட்ட தலா 6 மாத காலக் கெடுவும் இன்றுடன் நிறைவடைகிறது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடித் தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் 'சிக்கந்தர்' திரைப்படம் 2025ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
காவல்துறையினருக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சென்னையில் 3 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தபால் வாக்குப்பதிவுக்கு விண்ணப்பித்தவர்கள் நேரில் சென்று வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காவல்துறையில் இருப்பவர்கள் இன்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
காரைக்குடியில் நடக்க இருந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து அமித்ஷா காரைக்குடியில் ரோடு ஷோ நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தொழுகை முடித்துக் கொண்டு வந்த இஸ்லாமியர்களிடம் திமுக,அதிமுக,பாமக, வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு. திமுக - பாமக வேட்பாளர்கள் நேரில் சந்தித்து பரஸ்பரம் கைகளை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக,அதிமுக,பாமக வேட்பாளர்கள் தொழுகை முடித்துக் கொண்டு வந்த இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.திமுக பாமக வேட்பாளர்கள் பரஸ்பரம் கைகளை குலுக்கிக் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகை காரணமாக இன்று அரசு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்களின் நேர அட்டவணை மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்பதால் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8 - 11 மணி வரையிலும் மாலை 5 - 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மெக்கா மஸ்ஜித் மசூதி மற்றும் சார்மினார் ஆகிய இரு இடங்களிலும், ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சென்னை தியாகராஜர் நகரில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நடைபெற்றது. ரோடு ஷோவில் பட்டாசு வெடிக்கக்கூடாது, பதாகைகள் வைக்கக் கூடாது உள்ளிட்ட 20 நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது. அதனையும் மீறி இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழ்நாடு பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் இந்த தினம், அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் தந்து, அனைவர் வாழ்விலும் அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், நல்லிணக்கம் மற்றும் செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் ஊருக்குள் நள்ளிரவில் காட்டு யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் போராடி மீண்டும் யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.
மக்களவை தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை நெல்லைக்கு வருகை தருகிறார். இதனை முன்னிட்டு இன்று காலை 6 முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி காலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Background
- தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக கருதப்படும் ரம்ஜான் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மசூதிகள் மற்றும் வெளிப்புற மைதானங்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் ஒன்று கூடி கூட்டுத்தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இன்று விடுமுறை என்பதால் பலர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளதால் சுற்றுலா தலங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
- பிரதமர் மோடி சென்னை தியாகராய நகரில் பங்கேற்ற ரோடு ஷோவில் விதிமீறல் செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பிரதமர் மோடி சென்னைக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்த இந்த வாகன பேரணிக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறையில் மீண்டும் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக வெளியாகியுள்ள தகவல் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்லாத்துக்குடியில் சிறுத்தையை கண்டதாக தொழிலாளி ஒருவர் கொடுத்த தகவல் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அவசிய தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -