Breaking Tamil LIVE : தனது குடும்பத்தைப் பற்றிதான் முதலமைச்சர் கவலைப்படுகின்றார் - எடப்பாடி பழனிசாமி!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
முதலமைச்சர் தமிழ்நாடு மக்களைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. அவரது கவலை எல்லாம் அவரது குடும்பத்தைப் பற்றியதுதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியுள்ளார்.
Rihana Nun Outfit : இண்டர்வியூ இதழுக்கு, கன்னியாஸ்திரி உடையில் ரிஹானா அளித்திருக்கும் Pose, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சமூக வலைதளத்தில் கிறித்தவ மக்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்
ராம் நவமி யாத்திரை இந்த ஆண்டு நடத்துவதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதையடுத்து மனுதாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, காவல்துறை இந்த மனு தொடர்பாக இரண்டு நாட்களுக்குள் முடிவெடுக்கும்படி உத்தரவு பிறபித்துள்ளது.
ஏ.சி. கருவியை 25லிருந்து 27 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்த கேரள மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெறுப்பு அரசியலை பின்பற்றுகிறது திமுக அரசு. சனாதன தர்மத்தை ஒழித்துவிடுவதாக மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறது திமுக அரசு - மோடி
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி என மேட்டுப்பாளையம் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வால் கோவை ஜவுளி தொழில் பாதித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
Breaking News LIVE : திறமைகளை புறக்கணிக்கும் திமுக
வளர்ந்த பாரதம் வேண்டுமென்றால் வளர்ந்த தமிழ்நாடு அமைவது அவசியம். ஆனால், தமிழ்நாடு அரசு திறமைகளை புறக்கணிக்கிறது - பிரதமர் மோடி
குடும்ப வாரிசுகளே அரசியல் தலைவர்களாக வர வேண்டும் என திமுகவினர் நினைக்கிறார்கள் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பழங்குடியின பெண்ணை ஜனாதிபதி ஆக்கியுள்ளோம் என பிரதமர் மோடி பேசி வருகிறார்
Breaking News LIVE : திமுக, காங்கிரஸால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. மத்திய அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு மின்சாரமும், குடிநீரும் வழங்கியுள்ளது. திமுக, காங்கிரஸ்காரர்கள் தங்கள் சந்ததிகளை மட்டுமே முன்னிறுத்துவார்கள் - நீலகிரியில் பிரதமர் பேச்சு
Breaking News LIVE : திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்கு பாஜகவால் மட்டுமே முடியும் - பிரதமர் மோடி நீலகிரியில் பேச்சு
நெல்லை நா.த.க வேட்பாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறி 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரச்சாரம் மேற்கொண்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி நெல்லையில் வரும் 12ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் நெல்லை மாநகர் முழுவதும் நாளை 11ஆம் தேதி காலை 6 மணி முதல் 13 ஆம் தேதி காலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே அதிமுகவை கர்நாடகாவில் செயல்படுத்தி வருவதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என ராம்தேவுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தவறான விளம்பரம் தொடர்பான வழக்கில் நேற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருந்தார் ராம்தேவ். அலோபதி மருத்துவ முறையே தவறாக சித்திரித்து பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டதை எதிர்த்து வழக்கு.
பதஞ்சலி நிறுவனம் தொடர்பான வழக்கில் பாபா ராம்தேவ் மீண்டும் மன்னிப்பு கேட்டார். ஆனால் மன்னிப்பு கேட்கும் போது மிகவும் அலட்சியமாக இருப்பதாக நீதிபதிகள் கூறவே மன்னிப்பை மீண்டும் ஏற்க மறுத்துவிட்டனர்.
சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. 4 மாதமாக தேவநாதன் அளித்துள்ள காசோலை திரும்பி வந்த நிலையில் தேர்தலில் போட்டியிட பி படிவத்தில் அண்ணாமலை எப்படி கையெழுத்திட்டார் எனவும், 125 ஆண்டுகளாக மயிலாப்பூர் நிதி நிறுவனம் நன்றாக செயல்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை தருமபுரம் பா.ஜ.க. நிர்வாகி அகோரம் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மயிலாடுதுறையில் நேற்று மதியம் முதல் சிறுத்தை நடமாட்டம் எங்கும் தென்படவில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது. சிறுத்தை இடம் பெயர்ந்ததா என்பதை அறிய அண்டை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ. 53,640 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,705 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,400 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,175 ஆகவும் விற்பனையாகிறது.
திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் ஜெயக்குமார் வீட்டில் 10க்கும் மேற்பட்டோர் சோதனை நடைபெற்று வருகிறது.
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமான மூத்த அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பன் உடல் இன்று மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு விண்ணபிக்க ஏற்கனவே கால அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில், சிறப்பு வாய்ப்பாக நேற்றும் இன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தேசிய தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜாஃபர் சாதிக் விவகாரத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். மதுரையில் ரமலான் தொழுகை முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமீர் இதனை கூறினார்.
Background
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டில் 7வது முறையாக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ளார்.
நேற்று சென்னையில் பிரதமர் மோடி ரோட் ஷோ நடைபெற்றது. ரோட் ஷோவிற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர். மேலும், சென்னை மனதை வென்றது என பிரதமர் மோடி உருக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்து வேலூர் சென்றடைகிறார். கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மற்றும் தருமபுரியில் போட்டியிடும் சவுமியா அன்புமணி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 1.45 மணியளவில் மேட்டுப்பாளையம் சென்றடைகிறார்.
அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகனுக்கு வாக்கு சேகரிக்கிறார். இறுதியாக கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து மகாராஷ்டிராவிற்கு புறப்படுகிறார். அத்துடன் மோடியின் இரண்டு நாள் தமிழக பயணம் நிறைவடைகிறது.
தமிழ்நாட்டில் அரசியல் களம் அனல் பறக்கவே, டெல்லி முதலமைச்சர் மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்து கைது நடவடிக்கை சட்டவிரோதமானது இல்லை என தெரிவித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். பரபரப்பான சூழலில் இன்றைய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -